ஒரு சில பெண்கள் தலைகுளித்த பிறகு தங்களின் தலையை கோதிவிட்டுக் கொள்வர். இந்நிலையில் அவர்களுக்கு தோள் பட்டை வலி இருந்தால் தலையை கோதிக் கொள்வதில் கடும் சிரமமிருக்கும். தோள் பட்டை வலி அதகமாகிவிடும். இதனை மருத்துவர்கள் frozen shoulder என்று குறிப்பிடுகிறார்கள்.

இது குறித்து மருத்துவ ரீதியாக விளக்கவேண்டும் என்றால், தோள்பட்டையைச் சுற்றி உறை போன்ற ஒரு அமைப்பு இருக்கும். இந்த அமைப்பு பாதிக்கப்படும் போதோ அல்லது வீக்கம் உண்டாகி, இறுக்கம் ஏற்படும் நிலையே இதற்கு காரணம். இதனை மருந்து, மாத்திரை மற்றும் இயன்முறை மருத்துவ பயிற்சி மூலம் சீரமைக்க முடியும். ஒரு சிலருக்கு இதற்காக பிரத்யேக பட்டையை பயன்படுத்தியும் நிவாரணம் பெறலாம்.

சர்க்கரை நோயுள்ளவர்கள் மற்றும் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்ளாதவர்களில் 15 சதவீதத்தினர் இவ்வகையான தோள் பட்டை இறுக்கப் பாதிப்பிற்கு ஆளாகிறார்கள் என்கிறது ஆய்வு. அதனால் தோள்பட்டை இயக்கங்களை எப்போதும் சீராக வைத்துக் கொள்ளவேண்டும் அல்லது அதற்கான பயிற்சிகளை நாளாந்த மேற்கொள்ளவேண்டும்.

மருத்துவர் யுவராஜா

தொகுப்பு அனுஷா.