கொஸ்கம, புஸ்ஸலாவப் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக, கொஸ்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

Image result for துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் பலி virakesari

இறைச்சிக்காக வளர்க்கப்படும் பன்றி பண்ணையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த பண்ணைக்குள் நுழைந்து பன்றிகளைத் திருட முற்பட்ட வேளையில், காவலாளியால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

தற்போது, குறித்த காவலாளி கைது செய்யப்பட்டுள்ளதுடன் பொலிஸார் மேலதிக விசாரணையை முன்னெடுத்து வருகின்றனர்.

துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்த நபர் தொடர்பில் எந்ததொரு விவரமும் இதுவரை அறியப்படவில்லை.