யாழ்ப்பாணம், பருத்தித்துறை பகுதியில் கடற்படையினர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம், பருத்தித்துறை கடற்பகுதியில் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் மீதே குறித்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இதனடிப்படையில் கடற்படையினர் மீது தாக்குதல் மேற்கொண்ட 5 சந்தேக நபர்களை பொலிஸார் கைதுசெய்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.