வட­மா­காண சபையின் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு உறுப்­பி­னர்­க­ளுக்­காக தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் விஷேட அமர்வுக்கு வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் சமூகமளிக்கவிலை. 

 தமிழ் மக்கள் பேர­வையின் இணைத் தலைமைப் பத­வியை முத­ல­மைச்சர் ஏற்­றுக்­கொண்­டி­ருப்­ப­தை­ய­டுத்து உரு­வா­கி­யுள்ள சர்ச்­சைக்கு முடி­வைக்­காணும் வகையில் வட­மா­காண சபையின் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு உறுப்­பி­னர்­க­ளுக்­கான விஷேட அமர்வு இன்று காலை 10 மணியளவில் யாழ்ப்பாணத்தில் ஆரம்பமானது.

இந்த கூட்டத்திற்கு முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரனுக்கு அழைப்பு விடுத்திருந்த போதும் அவர் இன்று சமூமளித்திருக்கவில்லை.

தமிழ் மக்கள் பேர­வையின் இணைத் தலைவர் பத­வி­யி­லி­ருந்து உட­ன­டி­யாக வில­கு­மாறு மாகாண சபை உறுப்­பி­னர்கள் சிலரால் முன்­வைக்­கப்­பட்ட கோரிக்­கையை வட­மா­காண முதலமைச்சர் நிராகரித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.