முஸ்­லிம்­களின் வாக்­கு­களை அப­க­ரிப்­ப­தற்­கா­கவே தாஜுதீன் விவ­கா­ரத்­தினை பயன்­ப­டுத்­து­வ­தற்கு முயற்­சிக்­கின்­றார்கள் எனக் குற்றம் சாட்­டி­யுள்ள ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்னணிபின் கூட்டு எதிர்க்­கட்சி ஆத­ரவு பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நாமல் ராஜ­பக்ஷ  முஸ்­லிம்­களை தம்­மி­டத்­தி­லி­ருந்து என்­றுமே அந்­நி­யப்­ப­டுத்த முடி­யாது எனவும் உறு­திப்­படத் தெரி­வித்­துள்ளார். 

பிர­பல றகர் வீர­ரான வசீம் தாஜு­தீனின் மரணம் தொடர்பில் விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்ற நிலை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­துள்ளார்.

அவர் மேலும் தெரி­வித்த­தா­வது,  வசீம் தாஜுதீன் எனது நண்பர். 2015 ஆம் ஆண்டு நடை­பெற்ற ஜனா­தி­பதி, பாரா­ளு­மன்ற தேர்­தல்­களின் போது  முஸ்­லிம்­களின் வாக்­கு­களை  பெறு­வ­தற்­காக அவ­ரு­டைய மர­ணத்­தினை பயன்­ப­டுத்­தி­யி­ருந்­தார்கள்.

பின்னர் அந்த விட­யத்­தினை கிடப்பில் போட்­டி­ருந்­தார்கள். தற்­போது உள்­ளூராட்சி மன்­றங்­க­ளுக்­கான தேர்­தலை நடத்­து­மாறு நாம் அழுத்­த­ம­ளித்து வரு­கின்றோம். அர­சாங்கம் வாக்­கு­று­தி­களை வழங்கி அவற்றை நிறை­வேற்­றா­ததன் கார­ணத்தால் ஆட்­சி­யா­ளர்கள் மீது மக்கள் வெறுப்­ப­டைந்­துள்­ளார்கள். 

முன்னாள் ஜனா­தி­பதி மகிந்த ராஜ­ப­க் ஷவின் தலை­மையில் ஆட்சி அமைய வேண்­டு­மென்றும் எதிர்­பார்க்­கின்­றார்கள்.  அவ்­வா­றான நிலையில் எமக்கு எதி­ராக ஊழல், மோசடி குற்­றச்­சாட்­டுக்­களை சுமத்தி சிறைச்­சா­லை­க­ளுக்குள் வைத்து அர­சியல் பழி­வாங்கல் செய்­தார்கள். இருப்­பினும் எந்­த­வி­த­மான சான்­று­களும் இல்­லாத நிலையில் வெறு­மனே வழக்­கு­களை தொடர்ந்து விசா­ர­ணைகள் என்ற பெயரில் அலைக்­க­ழித்து வரு­கின்­றார்கள்.

இவை அனைத்­துமே அர­சியல் நாட­கங்­க­ளே­யாகும். தற்­போது ஆட்­சி­யா­ளர்கள் விரும்­பியோ விரும்­பா­மலோ உள்­ளூராட்சி மன்­றங்­க­ளுக்­கான தேர்­த­லொன்றை நடத்­தி­யா­க­வேண்டும் என்ற இக்­கட்­டான நிலைமை ஏற்­பட்­டி­ருக்­கின்­றது. அவ்­வா­றான நிலையில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷ­வுக்கு மக்கள் செல்­வாக்கு அதி­க­ரித்­துள்­ளது. இதனால் செய்­வ­த­றி­யாது தடு­மா­றிக்­கொண்­டி­ருக்கும் ஆட்­சி­யா­ளர்கள் மீண்டும் பொய்­களை உரைத்து பிர­சா­ரங்கள் செய்ய ஆரம்­பித்­தி­ருக்­கின்­றார்கள்.

குறிப்­பாக வசீம் தாஜு­தீனின் விட­யத்­தினை மீண்டும் கையி­லெ­டுத்து முஸ்­லிம்­களை ராஜ­ப­க்ஷக்­க­ளி­டத்­தி­லி­ருந்து அந்­நி­யப்­ப­டுத்­து­வ­தற்கு முயற்­சிக்­கின்­றார்கள். இந்த யதார்த்­தத்­தினை முஸ்லிம் சகோ­தரர்கள் புரிந்­துள்­ளார்கள். வசீம் தாஜு­தீனின் மரணம் நடை­பெற்­ற­வுடன் எனது சகோ­த­ரனை அத­னுடன் தொடர்புபடுத்­தி­னார்கள். 

பின்னர் என்னை தொடர்புபடுத்­தி­னார்கள். இவை அனைத்­துமே  புனை­க­தைகள் என்­பது புலப்­பட்­ட­வுடன் தற்­போது எமது தாயாரை தொடர்பு படுத்­து­வ­தற்கு முயற்­சி­களை மேற்­கொள்­கின்­றார்கள்.  ஆட்­சி­யா­ளர்­க­ளுக்கு முஸ்­லிம்­களின் வாக்­குகள் தேவை என்­பதன் கார­ணத்­தா­லேயே இவ்­வா­றான செயற்­பா­டு­களை மேற்­கொள்­கின்­றார்கள். இந்த சூட்­சு­மத்­தினை முஸ்­லிம்கள் புரிந்து கொள்ள வேண்டும். 

இலங்­கையை ஒரு குடையின் கீழ் கொண்டு வந்த முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷ இன, மத, மொழி வேறுபாடின்றியே சேவை யாற்றினார். அதன் காரணத்தால் தான் மீண்டும் அவருடைய தலைமையிலான ஆட்சியை மக்கள் எதிர்பார்க்கின்றார்கள். 

ஆகவே இலங்கையில் உள்ள தமிழ், முஸ்லிம் உள்ளிட்ட எந்தவொரு இன மக்களையும் மஹிந்த ராஜபக் ஷவிடத்திலிருந்து அந்நியப்படுத்த முடியாது. அதற்கு இடமளிக்க போவதும் இல்லை என்றார்.