நல்லூர் துப்­பாக்கிச் சூட்டு சம்­ப­வத்தின் பிர­தான சந்­தேக நப­ருக்கு அவ­ரது மனைவி ரெஸ்ரர்  (மின்­சாரம் பரி­சோ­திக்கும் கருவி) ஒன்­றினை பொதிக்குள் வைத்து கொடுக்க முயன்றவேளை சிறை­ச்சாலை காவ­லர்­களால் அது கைப்­பற்­றப்­பட்டுள்­ளது.

யாழ்.சிறைச்­சா­லையில் தனி சிறைக்­கூ­டத்­தி­லேயே சந்­தே­க­நபர் தனி நப­ராக தடுத்து வைக்­கப்­பட்டுள்ளார். அந்­நி­லையில் சந்­தே­க­ந­பரின் மனைவி சிறையில் தடுத்து வைக்­கப்­பட்டுள்­ள­வ­ருக்கு உடை­களை வழங்க பொதி செய்து சிறைச்­சாலை உத்­தி­யோ­கஸ்­தர்­க­ளிடம் கைய­ளித்­துள்ளார்.

அந்த பொதி­யினை சிறைச்­சாலை உத்­தி­யோ­கஸ்­தர்கள் சோத­னை­யிட்ட போது, அதனுள் இருந்து ரெஸ்ரர் (மின்­சாரம் பரி­சோ­திக்கும் கருவி ) ஒன்று மீட்­கப்­பட்­டது.

அதனை தொடர்ந்து மனை­வியை கடு­மை­யாக எச்­ச­ரித்த சிறைச்­சாலை உத்­தி­யோ­கஸ்­தர்கள் , கண­வனை பார்க்க சிறைக்கு வரு­வ­தற்கும் தடை விதித்­துள்­ளனர்.

நல்லூர் பின் வீதியில் கடந்த 22ஆம் திகதி மாலை நடை­பெற்ற துப்­பாக்கிச்சூட்டு சம்­ப­வத்தில் யாழ்.மேல் நீதி­மன்ற நீதி­ப­தியின் மெய் பாது­கா­வலர் ஒருவர் உயி­ரி­ழந்து இருந்­த­துடன் , மற்­று­மொரு மெய் பாது­கா­வலர் காய­ம­டைந்­தி­ருந்தார்.

அந்த சம்­ப­வத்­துடன் தொடர்­பு­டைய பிர­தான சந்­தே­க ­ந­ப­ரான சிவ­ராசா ஜெயந்தன் கடந்த 25ஆம் திகதி யாழ்.பொலிஸ் நிலை­யத்தில் சர­ண­டைந்தார். அதனையடுத்து குறித்த நபரை யாழ்.நீதிவான் முன்­னி­லையில் பொலிஸார் முற்படுத்திய போது சந்தேக நபரை எதிர்வரும் 8ஆம் திகதிவரையில் விளக்கமறி யலில் வைக்க உத்தரவிட்டிருந்தார்.