உமா ஓயா பல்நோக்கு செயற்திட்டம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணமளிப்பதற்கென நியமிக்கப்பட்ட அமைச்சரவை இணைக்குழு இன்று காலை பதுளை மாவட்ட செயலகத்தில் மீண்டும் கூடவுள்ளது.

பதுளை மாவட்ட செயலாளர் நிமல் அபேசிறி, அனர்த்த முகாமைத்துவ அமைச்சு, உமா ஓயா செயற்திட்டம் ஆகியவற்றின் அதிகாரிகள் உட்பட ஏனைய நிறுவனங்களின் அதிகாரிகளுடன் இந்த அமைச்சரவை இணைக்குழு கலந்துரையாடவுள்ளதாக குழுவின் உறுப்பினர் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

ஜனாதிபதி வழங்கிய பணிப்புரைக்கமையவும் இணைக்குழுவின் பரிந்துரைக்கமையவும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்து அங்கு ஆராயப்படும் என்றும் அமைச்சர் மஹிந்த அமரவீர மேலும் தெரிவித்தார்.