வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனை இராணுவத் தளபதி மகேஸ் சேனாநாயக்க இன்று பிற்பகல் சந்தித்துக் கலந்துரையாடினார்.

இந்தச் சந்திப்பு நல்லூரிலுள்ள வடமாகாண முதலமைச்சரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இடம்பெற்றது.

 இச் சந்திப்பிக் போது பல்வேறுவிடயங்கள் பேசப்பட்டதாகவும் குறிப்பாக காணி விடுவிப்பு மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகள் பற்றியும் பரஸ்பரம் கருத்து பறிமாறிக் கொள்ளப்பட்டுள்ளது.

இராணுவம் யுத்த காலத்தில் போன்று அல்லாது தற்போது எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை இராணுவத் தளபதி மகேஸ் சேனாநாயக்க, இராணுவ வீரர்களிடம் வலியுறுத்தி வருவதாக தெரிவித்ததாக வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.