நமது மக்கள் நல்ல தலைவரை தேடவில்லை... நிபுணரைத் தான் தேடுகிறார்கள்

Published By: Robert

30 Jul, 2017 | 12:20 PM
image

நமது மக்கள் நல்ல தலைவரை தேடவில்லை. நிபுணரை தேடுகிறார்கள் என திரை நட்சத்திரமான நடிகர் கமல்ஹாசன் தெரிவித்திருக்கிறார். 

இது தொடர்பாக சென்னையில் அவர் செய்தியாளரிடம் தெரிவித்ததாவது..

‘ நான் எனக்குள் தோன்றிய நல்ல கருத்துக்களை சொல்கிறேன். இன்றைய நிலையில் நடைபெறும் அரசியல் பற்றிய எனது கருத்துக்கள் பொதுவானவை. பொது வாழ்வில் ஊழல் நடைபெறக்கூடாது என்பதால் அதை சுட்டிக்காட்டுகிறேன். எனது கருத்து அரசியல் தொடர்பானது . அ.தி.மு.க. பற்றிய கருத்து அல்ல. மக்கள் விழிப்புணர்வு பெறவேண்டும் என்பதற்காக சொல்லப்படும் கருத்துக்கள். அதற்காக என்னை அரசியல் கட்சி தொடங்க வேண்டும் என்று வற்புறுத்த வேண்டாம். அரசியல் கட்சி தொடங்கினால் அதற்கு எவ்வளவு பணம் தேவை என்று எனக்கு தெரியும். எனது விமர்சனம் பொதுவானது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உயிருடன் இருந்த போதே தனிப்பட்ட முறையில் நான் குறிவைக்கப்பட்டேன். அது ஏன் என்பது இதுவரை தெரியவில்லை.

நான் புதிதாக அரசியல் பேசவில்லை. எதையும் மனதில் வைத்துக் கொண்டு குறை கூறவில்லை. மனதில் பட்டதை மக்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். நாடு நல்ல வழியில் செல்ல வேண்டும் என்பதில் பொது மக்களில் ஒருவன் என்ற முறையில் எனக்கும் அக்கறை உண்டு. கருத்து சொல்ல உரிமை உண்டு. அதுபற்றி யார் விமர்சித்தாலும் கவலை இல்லை. ரஜினி கட்சி தொடங்கினாலும் தவறு இருந்தால் சுட்டிக் காட்டுவேன். நமது மக்கள் நல்ல தலைவரை தேடவில்லை. நிபுணரைத்தான் தேடுகிறார்கள். பொதுப் பணி துறை என்றால் பொறுப்பான என்ஜினீயர் அதற்கு தலைமை ஏற்க வேண்டும். சுகாதாரதுறை என்றால் சிறந்த மருத்துவர் தான் அந்த துறைக்கு பொறுப்பு உடையவராக இருக்க வேண்டும். நான் ஒரு நடிப்பு பயிற்சி கல்லூரி தொடங்கினால் அது சிறப்பாக இருக்கும் காரணம் எனக்கு நடிப்பு பற்றி தெரியும். இதுபோல் ஒவ்வொரு துறையிலும் நிபுணத்துவம் உள்ளவர்கள் அமைச்சராக இருந்தால் நாட்டுக்கு நல்லது கிடைக்கும். படிக்காதவராக இருந்தாலும் காமராஜர் அற்புதமான மனிதர். தனி திறமை உள்ளவராக இருந்தார். சிவாஜி, எம்.ஜி.ஆர். போன்றவர்களும் படிக்கவில்லை. என்றாலும் அவர்கள் எதில் இருந்தார்களோ அதில் தங்கள் திறமையை நிரூபித்தார்கள். இன்று அது போன்ற தலைவர்கள் இல்லை. எனவே தலைவர்களை தேடாமல் நிபுணர்கள் தேவை என்று தான் மக்கள் கருதுகிறார்கள். அது போன்ற நிலை உருவாக வேண்டும்.’ என்றார் கமல்ஹாசன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதிய முயற்சியாக முதலில் இரண்டாம் பாகத்தை...

2024-04-18 17:34:41
news-image

சாதிய அரசியலை அலசும் அண்ட்ரியாவின் 'மனுசி'

2024-04-18 17:31:38
news-image

நடிகர் மன்சூர் அலிகான் வைத்தியசாலையில் அனுமதி...

2024-04-18 13:17:36
news-image

சுப்பர் ஸ்டார் ரஜினியின் பாராட்டைப் பெற்ற...

2024-04-17 17:43:13
news-image

இயக்குநர் ஷங்கரின் இல்ல திருமண வரவேற்பில்...

2024-04-17 17:37:23
news-image

சீயான் விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' திரைப்படத்தின்...

2024-04-17 17:39:11
news-image

வல்லவன் வகுத்ததடா - விமர்சனம்

2024-04-17 17:39:57
news-image

மோகன் நடிக்கும் 'ஹரா' படத்தின் டீசர்...

2024-04-16 17:39:18
news-image

கெட்ட வார்த்தைகளை பேசி ரசிகர்களை வசப்படுத்தி...

2024-04-16 17:43:10
news-image

தமிழர்களின் பாரம்பரிய கலைக்கு ஆதரவளிக்கும் ராகவா...

2024-04-16 17:45:02
news-image

டிஜிட்டல் தள ரசிகர்களின் வரவேற்பை பெறுமா...

2024-04-16 17:45:54
news-image

மே மாதத்தில் வெளியாகும் வரலட்சுமி சரத்குமாரின்...

2024-04-16 17:41:35