கையடக்கத் தொலைபேசியில் ஆபாச வீடியோ பார்த்த நபரை யாழ் பொலிஸார் நேற்று  கைது செய்துள்ளனர். 

திருகோணமலை பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய நபர் ஒருவர், யாழ்ப்பாணம் கல்லட்டி சந்தியில் நின்று தொலைபேசியில் ஆபாச படத்தினை பார்த்துக்கொண்டிருந்தமையால் அந்த வீதியால் சென்ற பொலிஸார் நபரின் நடத்தையில் சந்தேகம் கொண்டு, கையடக்கத் தொலைபேசியை பரிசோதனை செய்து பார்த்த உடனடியாக பொலிஸார் நபரை கைது செய்துள்ளனர். 

கைதுசெய்யப்பட்ட நபரை யாழ்.நீதிவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றனர்.