ஐ. நா. சபைக்கு இலங்கை தொடர்பாக சிவில் அமைப்புக்கள் இணைந்து அனுப்பிய அறிக்கை தொடர்பான செயலமர்வு

Published By: Robert

30 Jul, 2017 | 11:34 AM
image

பூகோள கல மீளாய்வு தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபைக்கு இலங்கை தொடர்பாக சிவில் அமைப்புக்கள் இணைந்து அறிக்கை ஒன்றை ஐக்கிய நாடுகள் சபைக்கு அனுப்பி வைத்துள்ளது.

அனுப்பி வைக்கப்பட்ட அறிக்கையின் தொடர் நடவடிக்கை மற்றும் வெளிநாட்டு தூதுவர்கள் மற்றும் ஐ.நா.சபையின் விசேட பிரநிதிகளை அறிவூட்டுவற்காகவும் சிபாரிசுகளை தயாரிப்பதற்கான செயலமர்வு இன்று காலை 10 மணியளவில் வவுனியா அருந்ததி மண்டபத்தில் இடம்பெற்று வருகின்றது.

4 வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் உலக நாடுகள் தொடர்பான மனித உரிமை வளர்ச்சி மீளாய்வுக்காக இலங்கை அரசால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கைக்கு சமாந்தரமான மற்றும் உண்மையானதுமான ஒரு சிறந்த அறிக்கையை அனுப்பி வைத்துள்ளமை மற்றும் அதன் தற்போதைய நிலமைகள் தொடர்பாகவே இந்த செயலமர்வு இடம்பெற்று வருகின்றது

இந்த செயலமர்வை தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம், மொன்லார் உட்பட பல சிவில் அமைப்புக்கள் மற்றும் மனித உரிமை சட்டத்தரணிகள் மற்றும் பல்துறை சார்ந்தவர்கள் இணைந்து முன்னெடுத்துள்ளனர்.

இச் செயலமர்வுக்கு இலங்கையில் உள்ள வடகிழக்கில் உள்ள 7 மாவட்டங்களின் சிவில் சமுக அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14