மன்னார் நகரம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 9 மணி நேர நீர்விநியோக தடை ஏற்படும் என நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

இதன்பிரகாரம், நாளை காலை 9.00 மணி முதல் பிற்பகல் 6.00 மணி வரையான காலப் பகுதியில் நீர் வெட்டு அமுல்­ப­டுத்­தப்­படும்.

மன்னார், வவுனியா பகுதிகளுக்கு நீர் விநியோகிக்கும், நீர் தாங்கியிலிருந்து நீர் விநியோகிப்பதற்கான புதிய வழங்கல் குழாயை நீர் விநியோக கட்டமைப்பில் இணைக்கும் நடவடிக்கை தொடர்பிலேயே இந்நீர்விநியோகத் தடை ஏற்படுவதாக சபை அறிவித்துள்ளது.