சகல மாகாண சபை உறுப்­பி­னர்­க­ளுக்­கு­மான தொலை­பேசி கொடுப்­ப­ன­வாக மாதாந்தம் 25,000 ரூபாவும் அலு­வ­ல­க­மொன்றை நடத்­திச்­செல்ல 50,000 ரூபாவும் வழங்க தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது. வடமேல் மற்றும் தென் மாகாண சபை­களின் உறுப்­பி­னர்­க­ளுக்கு தற்­போதும் தொலை­பேசி கொடுப்­ப­ன­வாக 25,000 ரூபா வழங்­கப்­பட்டு வரு­கின்­றது. 

மாகா­ண­சபை உறுப்­பி­னர்கள் அலு­வ­ல­கத்தை நடத்திச் செல்ல 50,000 ரூபா கொடுப்­ப­னவு வழங்க தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்ள போதும் கொடுப்­ப­னவு இன்னும் வழங்­கப்­ப­ட­வில்லை எனத் தெரி­ய­வ­ரு­கி­றது. பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு வழங்­கப்­படும் சம்­பளம் மற்றும் கொடுப்­ப­ன­வு­களில் அரை­வாசி மாகாண உறுப்­பி­ன­ரொ­ரு­வ­ருக்கு வழங்­கப்­பட வேண்­டு­மென்ற சட்­டத்தின் கீழ் இத்­த­கைய கொடுப்­ப­னவு வழங்­கப்­ப­டு­கி­றது. 

இந்த கொடுப்பனவுகளுக்காக வருடாந்தம் 45 கோடி ரூபாவுக்கு அதிகமாக செலவிடப்படுவதாக  கணக்கிடப்பட்டுள்ளது.