இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோதமாக மீன் பிடித்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பெயரில் 92 மீனவர்கள் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் மன்னார் சிறைகளில் அடைக்கப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 77 பேரை இலங்கை அரசாங்கம் விடுதலை செய்துள்ள நிலையில் விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் நாளை மறு தினம் தாயகம் திரும்பவுள்ளனர்.

யாழ்ப்பாணம் சிறையிலிருந்து 68 மீனவர்களையும் வவுனியா சிறையிலிருந்து 11 மீனவர்களையும் இலங்கை அரசாங்கம் விடுதலை செய்துள்ளது.

விடுவிக்கப்பட்ட மீனவர்கள் எதிர்வரும் 31 ஆம் திகதி இலங்கை கடற்படையினரால் காரைக்கால் துறைமுகத்துக்கு அழைத்துச்செல்லப்பட்டு இந்திய கடற்படை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.