இலங்­கைக்கு எதி­ரான முத­லா­வது டெஸ்ட் போட்­டியில் இரண்­டா­வது இன்­னிங்ஸில் ஆடி­வரும் இந்­திய அணி 3 விக்­கெட்­டுக்­களை இழந்து 189 ஓட்­டங்­களைப் பெற்று 498 ஓட்­டங்கள் முன்­னி­லை­யுடன் ஆடிவருகிறது.

இந்­திய - இலங்கை அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி காலியில் நடை­பெற்று வரு­கி­றது. 

இந்தப் போட்­டியில் முதலில் துடுப்­பெ­டுத்­தா­டிய இந்­தியா 600 ஓட்­டங்­களைக் குவித்­தது. ஷிகர் தவான் (190), புஜாரா (153) சதம் அடித்­தனர். 

பின்னர் விளை­யா­டிய இலங்கை அணி இந்­தி­யாவின் பந்து வீச்சில் திண­றி­யது. திமுத் (2), குண­தி­லக (16), குசல் மெண்டிஸ் (0) ஆட்­ட­மி­ழந்­தனர். தரங்க 64 ஓட்­டங்­க­ளு­டனும், திக்­வெல்ல 8 ஓட்­டங்­க­ளு­டனும் வெளி­யே­றினர்.

போட்­டியின் 2ஆ-ம் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை 5 விக்­கெட்­டுக்­களை இழந்து 154 ஓட்­டங்­களை எடுத்­தி­ருந்­தது. மெத்­தியூஸ் 54 ஓட்­டங்­க­ளு­டனும், தில்­ருவன் பெரேரா 6 ஓட்­டங்­க­ளு­டனும் களத்தில் இருந்­தனர்.

பலோ ஓனை தவிர்க்க இலங்கை இன்னும் 247 ஓட்­டங்­களைக் எடுக்க வேண்டும் என்ற நிலையில் நேற்று 3ஆ-ம் நாள் ஆட்டம் ஆரம்­ப­மா­னது. 

மெத்­தியூஸ், தில்­ருவன் பெரேரா ஆகியோர் தொடர்ந்து விளை­யா­டி­னார்கள். இரு­வரும் நிதா­ன­மாக ஆட்­டத்தை வெளிப்­ப­டுத்­தினர். 

57ஆ-வது ஓவரில் இலங்கை 200 ஓட்­டங்­களைத் தொட்­டது. இந்த ஜோடியை ஜடேஜா பிரித்தார். அவ­ரது பந்தில் மெத்­தியூஸ் 83 ஓட்­டங்­க­ளுடன் ஆட்­ட­மி­ழந்தார். அடுத்து தில்­ருவன் பெரே­ரா­வுடன் அணித் தலைவர் ரங்­கன ஹேரத் ஜோடி சேர்ந்தார்.

தில்­ருவன் பெரேரா 94 பந்­து­களில் அரைச் சதம் அடித்தார். இந்த ஜோடி­யையும் ஜடேஜா பிரித்தார். அவ­ரது பந்தில் ஹேரத் 9 ஓட்­டங்­க­ளுடன் ஆட்­ட­மி­ழந்தார். அடுத்து பிரதீப் கள­மி­றங்­கினார். இவர் 10 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க லஹிரு குமார களமிறங்கினார். மறு­மு­னையில் இருந்த தில்­ருவன் பெரேரா தொடர்ந்து சிறப்­பான ஆட்­டத்தை வெளிப்­ப­டுத்­தினார்.

அவர் பவுண்­டரி, சிக்­ஸர்­க­ளாக அடித்தார். உணவு இடை­வே­ளையின் போது இலங்கை 8 விக்­கெட்­டுக்­களை இழந்து 289 ஓட்­டங்­களை எடுத்­தி­ருந்­தது. 

உணவு இடை­வே­ளைக்கு பிறகு லஹிரு குமார ஆட்­ட­மி­ழந்தார். காயத்தால் வில­கி­யுள்ள அசேல ஆட­வில்லை. இதனால் இலங்கை அணி 291 ஓட்­டங்­க­ளுக்கு சகல விக்­கெட்­டுக்­க­ளையும் இழந்­தது. 

மறு­மு­னையில் நின்ற தில்­ருவன் பெரேரா ஆட்­ட­மி­ழக்­காது 96 ஓட்­டங்­களைப் பெற்­றுக்­கொண்டார். 

ஜடேஜா 3 விக்­கெட்­டுக்­களை வீழ்த்­தினார். பலோ ஓனை தவிர்க்க இலங்கை 401 ஓட்­டங்­களை எடுத்­தி­ருக்க வேண்டும். 

ஆனால் இந்­தியா பலோ ஓன் கொடுக்­காமல் தொடர்ந்து 2ஆ-வது இன்­னிங்ஸை ஆரம்­பித்­தது. 

இரண்­டா­வது இன்­னிங்ஸை ஆரம்­பிக்க தவான் - முகுந்த் ஜோடி கள­மி­றங்­கி­யது. வந்த வேகத்திலேயே தவான் 14 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த புஜாராவும் 15 ஓட்டங்களுடன் வெளியேற முகுந்துடன் ஜோடி சேர்ந்தார் அணித் தலைவர் விராட் கோஹ்லி.

நேற்­றைய நாள் முழு­வதும் இந்த ஜோடி நிலைத்து நின்­றது. ஆனாலும் நேற்­றைய நாளின் கடைசி ஓவரை விசிய குண­தி­லக்­கவின் மூன்­றா­வது பந்தில் முகுந்த் 76 ஓட்­டங்கள் பெற்­றி­ருந்த வேளையில் ஆட்­ட­மி­ழந்தார். அத்­துடன் மூன்றாம் நாள் ஆட்ட நேரம் முடி­வுக்கு வந்­தது. விராட் கோஹ்லி 81 ஓட்­டங்­க­ளுடன் களத்தில் உள்ளார்.

இந்­திய அணி இரண்­டா­வது இன்­னிங்ஸில் 189 ஓட்­டங்­க­ளுக்கு 3 விக்­கெட்­டுக்­களை இழந்­துள்­ளது. முதல் இன்­னிங்ஸில் பெற்ற 309 ஓட்­டங்கள் முன்­னி­லை­யுடன் மொத்தம் 498 ஓட்­டங்கள் முன்­னிலைப் பெற்று ஆதிக்கம் செலுத்துகிறது இந்தியா.