நல்­லாட்சி அர­சாங்கம் ஆட்­சிக்கு வந்த நாள் முதல் தற்­போது வரையில் 1500 எதிர்ப்பு ஆர்ப்­பாட்­டங்கள் இடம்­பெற்­றுள்­ள­தாக ஐக்­கிய தேசிய கட்­சியின் கொழும்பு மாவட்ட  பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் தெரி­வித்தார்.

அர­சாங்க தகவல் திணைக்­க­ளத்தில் நேற்று வெள்­ளிக்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் தெரி­விக்­கையில்,

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று வெள்­ளிக்­கி­ழமை முக்­கிய இரு விவா­தங்கள் இடம்­பெற­வி­ருந்­தது. வழமை போலவே கூட்டு எதி­ர­ணியும் அவற்று க்கு இடை­யூறு செய் யும் பணி­களை முன்­னெ­டுத்­தது. அவர்கள் இடை­யூறு செய்­தி­ருக்­கா­விடின் அம்­பாந்­தோட்டை துறை­முக விவ­காரம் ‍தொடர்­பி­லான விவா­தங்கள் சிறப்­பாக இடம்­பெற்­றி­ருக்கும்.

அதற்­கான முதற்­கட்ட நட­வ­டிக்­கை­களை ஆரம்­பிக்கும் போதே கூட்டு தினேஷ் குண­வர்­தன எம்.பி.தலை­மை­யி­லான குழு சபையை குழப்பும் கட­மை­களை ஆரம்­பித்­து­விட்­டது. சபா­நா­ய­கரை நிந்­திக்கும் வகையில் சபைக்கு பொருந்­தாத வார்த்­தை­க­ளையும் பிர­யோ­கித்­தனர்.

கூட்டு எதி­ர­ணிக்கு இது முதல் முறை அனு­ப­வ­மல்ல 100 நாள் அர­சாங்கம் ஆட்­சிக்கு வந்­த­போது அதன் முதல் நாள் அன்று பாரா­ளு­மன்­றத்தில் முழு நாளை கழித்து அவ்­வ­ணியின் உறுப்­பி­னர்கள் சபைக்குள் தகாத செயற்­பா­டு­களை முன்­னெ­டுத்­தி­ருந்­தார்கள் மது­பா­வனை அவற்றில் சுட்­டிக்­காட்­டத்­தக்க கார­ண­மாகும்.

இவர்கள் அர­சாங்­கத்தின் பய­ணத்தை நிறுத்த சதி செய்­கின்­றார்கள் என்­பதை நாம் அறிவோம். அதற்­கா­கத்தான் பாரா­ளு­மன்­றத்தில் ஜனா­தி­ப­திக்கு ஒதுக்­கப்­பட்­டுள்ள ஆச­னத்தில் பிர­சன்ன ரண­துங்க எம்.பி யும் சபா­நா­யகர் ஆச­னத்தில் பிரி­யங்­கர ஜய­ரத்ன எம்.பி யும் அமர்ந்­து­கொண்டு அட்­ட­காசம் செய்­தார்கள். இவற்­றைதான் ஆட்சி மாற்­றத்­திற்­கான சதிச் செயற்­பா­டுகள் என்று கூறு­கின்றோம். எனவே இவர்­க­ளுக்கு எதி­ராக சபா­நா­யகர் கடு­மை­யான தீர்­மா­னங்கள் எடுக்க வேண்டும். 

எவ்­வா­றா­யினும் இன்­று­வ­ரையில் அர­சாங்­கத்­திற்கு எதி­ரான 1500 போராட்டங்கள் இடம்பெற்றுள்ளது. இவை அனைத்துமே அரசியல் சார்ந்தவை என்பதை நாங்கள் அறிவோம். சமூகம் சார்ந்த போராட்டங்கள் எவையும் இடம்பெறவில்லை. அதனால் இன்று அரசாங்கம் விழித்துக்கொண்டுள்ளது என்றார்.