தமி­ழீழ விடு­தலை புலிகள் அமைப்பின் நட­வ­டிக்­கை­க­ளுக்கு பயன்­ப­டுத்­தி­ய­தாக குற்­றம்­சாட்டி, கொழும்பு வெள்­ள­வத்தை பகு­தியில் அமைந்­துள்ள தமிழர் ஒரு­வ­ருக்கு சொந்­த­மான கட்­ட­டத்தை பறி­முதல் செய்ய, அப்­போ­தைய பாது­காப்பு அமைச்­ச­ரான முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ பிறப்­பித்த உத்­த­ரவை உயர் நீதி­மன்றம் நேற்று முன்தினம் வியா­ழக்­கி­ழமை ரத்து செய்­துள்­ளது.

இதன்­படி பயங்­க­ர­வாத புல­னாய்வு பிரிவு இந்த கட்­ட­டத்தை எட்டு வாரங்­க­ளுக்குள் அதன் உரி­மை­யா­ள­ரிடம் கைய­ளிக்க வேண்­டு­மென நீதி­மன்றம் உத்­த­ர­விட்­டுள்­ளது.

இந்த கட்­ட­டத்தை பறி­முதல் செய்ய முன்னாள் பாது­காப்பு அமைச்சர் எடுத்த தீர்­மா­னத்­தினை    எதிர்த்து, அதன் உரி­மை­யா­ளர்­க­ளான சுவிட்­சர்­லாந்தில் வசித்து வரும் சண்­முகம் சிவ­ராஜா மற்றும் சிவ­ராஜா சரோ­ஜினி தம்­ப­திகள் தாக்கல் செய்த மனுவை விசா­ரித்த உயர் நீதி­மன்றம் இந்த தீர்ப்பை வழங்­கி­யது.

தங்­க­ளுக்கு சொந்­த­மான இந்த கட்­ட­டத்தை விடு­தலை புலி­க­ளுக்கு சொந்­த­மான நிதியை பயன்­ப­டுத்தி வாங்­கி­ய­தா­கவும் அங்கு விடு­தலை புலி­க­ளுக்கு உதவும் மருத்­து­வ­ம­னையை நடத்­தி­ய­தாக குற்­றஞ்­சாட்டி பயங்­க­ர­வாத புல­னாய்வு பிரி­வினர் விசா­ர­ணையை ஆரம்­பித்­த­தாக மனு­தா­ரர்கள் தெரி­வித்­தி­ருந்­தனர்.

மனுவை ஆராய்ந்த நீதி­ப­திகள் அவ­சர­ர­கால சட்­டத்தின் கீழ் இந்த கட்­டி­டத்தை பறி­முதல் செய்யும் அள­விற்கு போதிய ஆதா­ரங்கள் இல்லை  எனவும் அதனை பறி­முதல் செய்­வ­தற்கு முன்னாள் பாது­காப்பு அமைச்சர் மஹிந்த ராஜ­பக் ஷ பிறப்­பித்த உத்­த­ரவு சட்ட ரீதி­யாக செல்­லு­ப­டி­யா­காது என்றும் தீர்ப்­ப­ளித்­துள்ள உயர் நீதி­மன்றம், இந்த நட­வ­டிக்­கையால் மனுதாரர்களின் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.