பாட­சா­லை­களை விட்டு இடை நடுவில் விலகிச் சென்ற மாண­வர்கள் தமக்­கான சுய­தொழில் முயற்­சி­யாக போதைப் பொருள் விற்­ப­னையில் ஈடு­பட்டு வரு­வ­தா­க மாத்­தளை மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ரோகினி கவி­ரத்ன தெரி­வித்தார்.

மாத்­தளை மாவட்ட செய­ல­கத்தில் இடம்­பெற்ற மாவட்ட அபி­வி­ருத்தி ஒருங்­கி­ணைப்பு கூட்­டத்தில் கலந்துகொண்டு கருத்து வெளி­யிடும் போதே அவர் இதனைத் தெரி­வித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்­பி­டு­கையில், பாட­சா­லையை விட்டு இடை நடுவில் விலகிச் சென்ற மாண­வர்கள் தம்­மோடு கல்வி கற்ற சகாக்கள் அவர்­களின் காலப் பகு­தியில் கல்வி கற்ற பிற பாட­சாலை சகாக்கள் ஆகியோர் மத்­தி­யி­லுமே இப்­போ­தை­பொருள் வியா­பாரம் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றது.

சில மாண­வர்கள் மத்­தி­யி­லுள்ள இவ்­வா­றான தவ­றான பழக்­க­வ­ழக்­கங்­களால் முழுப் பாட­சாலை சமூ­கமே சீர­ழி­வுக்­குட்­படும் அபாய நிலை காணப்­ப­டு­கி­றது.

இதனால் அவர்கள் கெட்­ட­ழிந்து போவ­தோடு, பிற­பா­ட­சாலை சந்­த­தி­யி­ன­ரையும் இதுபோன்று போதைப்­பொருள் பாவ­னையில் ஈடு­ப­டுத்தி வரு­வது உட­ன­டி­யாகத் தடுத்து நிறுத்­தப்­பட வேண்­டி­யது கட்­டா­ய­மாகும்.

அதற்கு உரிய நட­வ­டிக்­கையை மாவட்ட ஒருங்­கி­ணைப்புக் குழு மேற்­கொள்ள வேண்­டு­மெ­னவும் கேட்­டுக்­கொண்டார்.

இவ்­வி­டயம் தொடர்பில் கூட்­டத்­துக்குத் தலைமை வகித்த மத்­திய மாகாண முத­ல­மைச்சர் சரத் ஏக்­க­நா­யக்க குறிப்­பி­டு­கையில்,

இது தொடர்பாக குடும்ப சூழலில் பிள்­ளை­களின் வளர்ப்பு முறையில் நிலவும் குறை­பா­டுகள் முக்­கி­யத்­துவம் வகிக்கும் அதே­வேளை சமு­தா­யத்தின் உறுப்­பி­னர்­க­ளாக உரு­வெ­டுத்­துள்ள அத்­த­கைய இளை­ஞர்கள் தவ­றான வழியில் செல்­வதைத் தடுத்து நிறுத்தும் பொறுப்பு பொலி­ஸாரின் கையி­லேயே இருக்­கின்­றது. 

ஆகையால் குறிப்­பிட்ட பிர­தேச பொலிஸார் இதனைக் கருத்திற் கொண்டு கடுமையான நடைமுறைகளை மேற் கொண்டு இந்நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கும்படியும் பொலிஸாருக்கு பணிப் புரை விடுத்தார்.