பிணை­முறி தொடர்பில் விசா­ரணை செய்யும் ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் விசா­ர­ணைக்­கா­லத்தை நீடிப்­ப­தற்கு ஜனா­தி­ப­திக்கு அதி­காரம் இல்லை. அவ­ருக்கு அறிக்­கையை நீடிப்­ப­தற்­கான அதி­கா­ரமே உள்­ளது. ஆணைக்­கு­ழுவின் விசா­ரணை  காலத்தை நீடிப்­ப­தற்கு வர்த்­த­மானி அறி­வித்­தல் வெளி­யி­டப்­பட வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். ஆனால் ஏப்ரல் மாதத்தில் மீண்­டு­மொரு தவணைக்  காலத்­துக்கு தவ­ணையை நீடிப்­ப­தற்கு வர்த்­த­மானி வெளி­யி­டப்­ப­ட­வில்லை. எனவே சட்­டத்­தின்­படி ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தவ­றி­ழைத்­து­விட்­ட­தாக அர்ஜூன் அலோ­சியஸ் சார்பில் வாதா­டிய சட்­டத்­த­ரணி காலிங்க இந்­தி­ர­திஸ்ஸ நேற்று ஜனா­தி­ப­தி­ஆ­ணைக்­கு­ழுவில் தெரி­வித்தார்.

சர்ச்­சைக்­கு­ரிய பிணை­முறி விவ­காரம் தொடர்­பான ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் விசா­ர­ணைகள் இறுதி கட்­டத்தை நெருங்­கி­யுள்ள போதிலும் தொடர்ந்தும் பலரை விசா­ர­ணைக்­குட்­படுத்த வேண்டும் என ஆணைக்­குழு அறி­வித்­த­மையால் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன குறித்த முடிவை எடுத்­தி­ருந்தார். 

இந்­நி­லையில் நேற்று 10. 30 க்கு கூடிய ஆணைக்­கு­ழுவில் சட்­டத்­த­ரணி காலிங்க இந்­தி­ர­திஸ்ஸ இரண்டு விண்­ணப்­பங்­களை முன்­வைத்­தி­ருந்தார். இதன்­போது ஆணைக்­கு­ழுவின் பத­விக்­கா­லத்தை மீண்டும் நீடித்­தி­ருப்­பது தவறு என்­பதை சுட்­டிக்­காட்­டி­யி­ருந்தார்.

இதன்­போது  குறுக்­கிட்டு வாதிட்ட அரச சட்­டத்­த­ரணி டப்­புல லிவேரா ஆணைக்­கு­ழுவின் விசா­ர­ணைக்­கா­லத்தை நீடிக்க தாமே ஜனா­தி­ப­தி­யிடம் கோரி­யி­ருந்­த­தா­கவும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் ஆணைக்­கு­ழு­வுக்கு எழுத்­து­மூலம் அறி­வித்­தி­ருந்த­தா­கவும் குறிப்­பிட்டார். 

ஆணைக்­கு­ழுவின் விசா­ர­ணைக்­கா­லத்தை நீடிக்க வர்த்­த­மானி வெளி­யி­டப்­பட வேண்­டி­யது கட்­டா­ய­ம­ான­தல்ல எனவும் சட்டம் முறை­யாக பின்­பற்­றப்­ப­டு­கின்­றது எனவும் அவர் மேலும் தெரி­வித்தார்.

இவ்­வ­ருடம் ஜன­வரி மாதம் ஆரம்­ப­மா­கிய ஆணைக்­கு­ழுவின் கால எல்லை ஏப்ரல் 27 ஆம் திக­தி­யுடன் நிறை­வ­டை­ய­வி­ருந்த நிலையில் அதனை ஜூலை 27 ஆம் திகதி வரை நீடிக்க தீர்­மா­னிக்­கப்­பட்­டது.   அந்த கால வரை­ய­றையும் இம்­மாதம் 27 ஆம் திக­தி­யோடு நிறை­வ­டை­ய­வுள்ள நிலையில் தற்­போது மேலும் மூன்று மாதங்கள், அதா­வது ஒக்­டோபர் 27 ஆம் திகதி வரை ஆணைக்­கு­ழுவின் செயற்­பா­டு­களை நீடிக்க தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.

மத்­திய வங்­கியில் இடம்­பெற்­ற­தாக கூறப்­படும் பிணை முறி மோசடி விவகாரம் தொடர்பில் விசாரணை செய்ய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் உயர் நீதிமன்ற நீதியரசர் கே.டீ. சித்திரசிறி, பி.எஸ் ஜெயவர்தன மற்றும் ஓய்வுபெற்ற பிரதி கணக்காய்வாளர் நாயகம் வேலுப்பிள்ளை கந்தசாமி அடங்கிய மூன்றுபேர் கொண்ட குழு  நியமிக்கப்பட்டது.