இந்­தியா, ஜப்பான், சீனா­வுடன் பொரு­ளா­தார உடன்­ப­டிக்­கைகள் : ரணில் விக்கிரமசிங்க

Published By: Priyatharshan

29 Jul, 2017 | 12:07 PM
image

நாம் முன்­னெ­டுத்­து­வரும் பொரு­ளா­தார நகர்­வுகள் மற்றும் சர்­வ­தேச நாடு­க­ளுடன் நாம் செய்­து­கொண்­டுள்ள பொரு­ளா­தார உடன்­ப­டிக்­கை­களின் மூல­மாக இலங்கை கடன் சுமை­களில் இருந்து விரை­வாக விடு­த­லை­ய­டைய முடியும். 2020 ஆம் ஆண்டில் நாம் எமது கடன் சுமை­களை வெகு­வாக குறைத்­துக்­கொள்ள முடியும் என பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்தார். 

 2020 இல் நாட்டின் தேசிய  உற்­பத்­தியை   3.3 வீத­மாக மாற்­றவே முயற்­சிக்­கின்றோம் எனவும் அவர் குறிப்­பிட்டார். 

வலு­வான பொரு­ளா­தா­ரத்தை உரு­வாக்­குதல் என்ற செய்­தி­யாளர் சந்­திப்பு நேற்று மத்­திய வங்­கியில் இடம்­பெற்­றது. இதில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே   அவர் இதனைக் குறிப்­பிட்டார். 

அவர் மேலும் கூறு­கையில், 

இந்த ஆண்டில் ஏற்­பட்ட அனர்த்­தத்தின் பின்னர் நாட்டின் பொரு­ளா­தாரம்  வீழ்ச்­சி­ய­டையும் எனவும் தேசிய உற்­பத்தி வீழ்ச்­சி­ய­டையும்  என்ற அச்சம் இருந்­தது. 

எனினும் இந்த ஆண்டில் அவ்­வா­றான எந்­த­வித சம்­ப­வங்­களும் இடம்­பெ­ற­வில்லை. சர்­வ­தேச நாணய நிதி­யத்தின் அறிக்­கையின் பிர­காரம் இலங்­கையின் பொரு­ளா­தார  செயற்­பா­டு­களில்  திருப்தி ஏற்­பட்­டுள்­ள­தா­கவும், நாட்டின் கால­நிலை மாற்றம் மூல­மான பாதிப்­புகள் ஏற்­பட்ட போதிலும்  பொரு­ளா­தார நகர்வு சீரா­கவே அமைந்­துள்­ளது எனவும்    குறிப்­பிட்­டுள்­ளது. 

ஆகவே கடந்த ஆண்­டுடன் ஒப்­பி­டு­கை­கையில்  பொரு­ளா­தார வளர்ச்சி வீதம் சம­மா­ன­தாக அல்­லது அத­னுடன் சற்று கூடிய தன்­மையில் உள்­ளது. 

சர்­வ­தேச நாணய நிதியம் இலங்­கைக்­காக ஒதுக்­கிய 501.5 மில்­லியன் அமெ­ரிக்க டொலர்­களின் இரண்டாம் கட்ட நிதி­யான 167.2  மில்­லியன் அமெ­ரிக்க டொலர்­களை எமக்கு வழங்க தீர்­மா­னித்­துள்­ளது. எமது பொரு­ளா­தார நகர்­வு­களின் நேர்த்தி கார­ண­மா­கவே இந்த நிதி எமக்குக் கிடைக்­கின்­றது. கடந்த காலத்தில் நாம் கையாண்ட வரிக் கொள்கை, வர­வு­செ­லவு திட்ட சம­நி­லைத்­தன்மை ஆகி­ய­வற்றின் விளை­வு­களே இன்று எமக்கு மீண்டும் மிகப்­பெ­ரிய தொகை நிதி கிடைக்க கார­ண­மாக அமைந்­துள்­ளன. நாட்டின்  பொரு­ளா­தா­ரத்தை பலப்­ப­டுத்­து­வதில் பல்­வேறு நகர்­வு­களை நாம் கையாண்டு வரு­கின்றோம். இப்­போது நாம் அபி­வி­ருத்தி மூல­மான பொரு­ளா­தார வளர்ச்­சியை அடை­யவே  முயற்­சித்து வரு­கின்றோம். அதில் இருந்து வில­கிக்­கொள்ள  நாம் தயா­ராக இல்லை. 

ஆகவே எமது பொரு­ளா­தார வளர்ச்சி   6 வீதம் அளவில் அதி­க­ரிக்க வேண்டும் என்ற இலக்கை கொண்டே நாம் முன்­ன­கர்ந்து செல்­கின்றோம். 

எமது அபி­வி­ருத்தித் திட்­டங்­களில் நேரடி சர்­வ­தேச முத­லீ­டு­களை அதி­க­ரித்தல், தனியார் துறையை மேலும் பலப்­ப­டுத்தி பொரு­ளா­த­ாரத்தை உறு­திப்­ப­டுத்தல் மற்றும் அரச வரு­வாயை அதி­க­ரித்தல் என்­ப­ன­வற்­றுக்கே   நாம் முயற்­சிக்­கின்றோம். 2020 ஆம் ஆண்டில்  நாட்டின் தேசிய  உற்­பத்­தியை    3.3 வீத­மாக மாற்­றவே முயற்­சிக்­கின்றோம். அதிக தொகையில் கடன்­களை வாங்­கி­கொண்டு அபி­வி­ருத்தி செய்­வதை விடவும் இந்த நாட்டின் தொழிற்­சாலை, விவ­சா­யத்தை பலப்­ப­டுத்தி இலங்­கையை  இந்து சமுத்­தி­ரத்தின்  பல­மான நாடாக மாற்­றவே நகர்­கின்றோம்.   ஆகவே நாம் 2020 ஆண்டில் எமது கடன் தொகையில் இருந்து விடு­ப­டு­வ­தற்­கான   நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்து வரு­கின்றோம். 

இன்று ஜி. எஸ்.பி பிளஸ் எமக்குக் கிடக்­கப்­பெற்­றுள்­ளது. இதன் மூல­மாக எமது உற்­பத்­திகள் ஐரோப்­பிய நாடு­க­ளுக்கு வழங்கும் வாய்ப்­புகள் கிடைத்­துள்­ளன. ஆறா­யிரம் உற்­பத்தி பொருட்­களை நாம் ஐரோப்­பிய நாடு­க­ளுக்கு ஏற்­று­மதி செய்ய முடியும். ஆனால் எம்மால் இப்­போது ஆறா­யிரம் உற்­பத்­தி­களை கொடுக்க முடி­யா­விட்­டாலும் எமது நாட்டில் இருந்து குறைந்­தது 100 தொடக்கம்  150 பொருட்­களை உற்­பத்தி  செய்­வதன்  மூல­மாக எமது பொரு­ளா­தா­ரத்தை உறு­திப்­ப­டுத்த வேண்டும். 

ஜி.எஸ்.பி.  பிளஸ் சலு­கையை கொண்ட நாடு­க­ளுக்கு பய­ணப்­பொ­ருட்­களை அமெ­ரிக்­கா­விற்கு கொண்டு செல்ல அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ளது. இது மிகப்பெரிய வாய்ப்பாக கருதப்பட வேண்டும்.  

அதேபோல் இந்தியா, ஜப்பான், சீனா ஆகிய நாடுகளுடன் பொருளாதார உடன்படிக்கைகளை செய்து போட்டிகர பொருளாதார தன்மைகளை உருவாக்கவே நாம் முயற்சித்து வருகின்றோம். இதன் மூலமாக மட்டுமே கடன்களில் இருந்து எம்மால் விடுபட முடியும். அதற் கான புதிய வேலைத் திட்டங்களை நாம் முன்னெடுத்து வருகின்றோம் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31