அரசாங்கத்தினால் மலையகத்தில் நிரமாணிக்கப்படும் வீடமைப்பு திட்டங்களை துரிதகதியில் முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தெரிவித்தது.

அரசாங்கம் உறுதியளித்தவாறு ஐம்பதாயிரம் வீடுகளை அமைப்பதாயின் நாளொன்றுக்கு எழுபது வீடுகள் அமைக்கப்பட வேண்டும். 

அவ்வாறானதொரு அபிவிருத்தி மலையகத்தில் இடம்பெறவில்லை. மலையக வீடமைப்பு திட்டம் மந்தகதியிலேயே நகர்கின்றது எனவும் முன்னாள் மத்திய மாகாண கல்வி அமைச்சர் எஸ். அருள்சாமி குறிப்பிட்டார்.

கொழும்பில் அமைந்துள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைமைக்காரியாலயத்தில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.