கம்புறுபிட்டியவில் அண்மையில் தந்தையொருவர் தனது 3 பிள்ளைகளையும் தூக்கிட்டதன் பின்னர் தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தையடுது அவரது மனைவி தனது மூத்த மகனான தேரருடன் பொலிஸ்நிலையம் சென்று வாக்குமூலமொன்றை வழங்கியுள்ளார்.

 குறித்த சம்பவம் இடம்பெற்று ஒருமாதங்கள் கழிந்த நிலையில் குறித்த தாயார் பொலிஸ் நிலையம் சென்று வாக்கு மூலம் அளித்துள்ளார்.

நான்கு பிள்ளைகளைக் கொண்ட குறித்த குடும்பத்தில் எஞ்சியுள்ள மூத்த ஆண் பிள்ளையான ரன்சேகொட சுதந்த தேரருடன் அவரது தாய் பொலிஸ் நிலையத்திற்கு செற்றுள்ளார்.

கம்புறுப்பிட்டிய பகுதியில்  கடந்த மாதம் 26 ஆம் திகதி வீட்டுக்கு முன்புறத்தில் இருந்த  மரங்களில், 43 வயதுடைய தந்தையொருவர் தனது 16 மற்றும் 10 வயதுடைய மகள்கள், 14 வயதுடைய மகனான தேரர் ஆகியோரை  தூக்கிட்டு விட்டு, வீட்டின் பின்புறத்தில் தீவைத்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட நிலையில் பொலிஸாரால் சடங்களாக மீட்கப்பட்டிருந்தனர்.

சம்பவம் தொடர்பில் தாயார் பொலிஸில் வாக்குமூலமளிக்கையில்,

மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்த எமது குடும்பம், அண்மைக் காலமாக பொருளாதார பிரச்சினைக்கு முகங்கொடுத்து வந்தது.

குடும்பத்தில் முரண்பாடு ஏற்பட்டதால், எனது இரண்டு மகன்களையும் தேரர்களாக்க தீர்மானித்தோம்.

சில நாட்களில் கணவன் மது அருந்திய நிலையில் வீட்டுக்கு வந்தது சண்டையிட்டதால், நான் எனது பெற்றோரின் வீட்டுக்கு சென்றேன். இந்லையில் சில நாட்களுக்கு பின்னர் நான் வீடு திரும்பினேன்.

ஒரு மாதம் கழித்து, வெளிநாடு சென்று பணிபுரிய எண்ணி கணவனிடம் அனுமதி கேட்டேன். அதற்கு அனுமதி தருமாறு கணவனிடம் கேட்டதால் குடும்பத்தில் மீண்டும் குழப்பம் ஏற்பட்டது.

இந்நிலையில், மீண்டும் எனது மகள்கள் இருவரையும் வீட்டில் விட்டுவிட்டு எனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டேன்.

இந்த நிலையில், வீட்டுக்கு விரைவில் வருமாறு  மகள்கள்மார் தொலைபேசியூடாக எனக்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில், எனது கணவன் மற்றும் 3 பிள்ளைகளும் தூக்கில் தொங்கிய நிலையில் சடலங்களாக பொலிஸார் மீட்டுள்ளனர் என தாயார் வாக்குமூலமளித்துள்ளார்.