பசில் ராஜ­பக் ஷ, நாமல் ராஜ­பக் ஷ, ஜோன்ஸ்டன் பெர்­னாண்டோ உள்­ளிட்ட 23 பேருக்கு எதி­ராக நிதிக் குற்றப் புல­னாய்வுப் பிரி­வி­னரின் விசா­ர­ணை­களின் பின்னர் மேல் நீதி­மன்­றங்­களில் 12 வழக்­குகள் தாக்கல் செய்­யப்பட்­டுள்­ளன.

இது­வரை நிதிக் குற்றப் புல­ன­ய் வுப் பிரி­வுக்கு கிடைக்கப் பெற்ற 335 முறைப்­பா­டு­களின் அடிப்­ப­டையில் செய்­யப்பட்ட விசா­ர­ணை­க­ளி­லேயே இந்த 12 வழக்­கு­களும் தாக்கல் செய்­யப்பட்­டுள்­ள­தா­கவும், 89 சம்­ப­வங்கள் தொடர்பில் விசா­ரணை நிறை­வ­டைந்து கோ­வைகள் சட்ட மா அதி­ப­ருக்கு அனுப்­பட்­டுள்­ள­தா­கவும் மேலும் 131 சம்­ப­வங்கள் தொடர்­பி­லான விசா­ர­ணைகள் இடம்­பெற்று வரு­வ­தா­கவும்   பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் பொலிஸ் அத்­தி­யட்சகர் சட்­டத்­த­ரணி ருவான் குணசே­கர தெரி­வித்தார்.

அரச தகவல் திணைக்­க­ளத்தில் நிதிக் குற்றப் புல­னாய்வுப் பிரிவின் நட­வ­டிக்­கை­களை தெளி­வு­ப­டுத்தும் விஷேட செய்­தி­யாளர் சந்­திப்பின் போதே அவர் இதனைத் தெரி­வித்தார்.

நிதிக் குற்­றங்கள் தொடர்பில் இடம்­பெறும் விசா­ர­ணை­களில் அக்­குற்­றங்கள் வெளி­நா­டுகள் ஊடா­கவும் இடம்­பெற்­றுள்­ளமை தொடர்பில் சான்­றுகள் உள்­ளதால் 25 நாடு­க­ளுடன் அந்­தி­யோன்ய அடிப்­ப­டையில் தக­வல்­களைப் பெற்று விசா­ர­ணைகள் நடாத்­தப்ப்ட்டு வரு­வ­தா­கவும் அவர் சுட்­டிக்­காட்­டினார். இந் நிலையில் இது­வரை நிதிக் குற்றப் புல­ன­யவுப் பிரி­வி­னரால் 56 சந்­தேக நபர்கள் கைது செய்­யப்ப்ட்­டுள்­ள­தா­கவும் 10 பேர் நீதி­மன்­றங்­களில் சர­ண­டைந்­துள்­ள­தா­கவும் அவர் மேலும் தெரி­வித்தார்.

 நிதிக் குற்றப் புல­ன­யவுப் பிரி­வினர் இது­வரை செய்­துள்ள விசா­ர­ணைகள் கார­ண­மாக 237.5 மில்­லியன் ரூபா சொத்­துக்கள் அரச உட­மை­ய­க­கப்ப்ட்­டுள்­ள­துடன் மேலும் 400 மில்­லியன் சொத்­துக்கள் அரச உட­மை­யாக்­கப்­படும் செயற்­பா­டுகள் இடம்­பெற்று வரு­வ­தா­கவும் பொலிஸ் அத்­தி­யட்சர் ருவன் குன­சே­கர தெரி­வித்தார்.

இதன் போது அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது,

' நிதிக் குற்றப் புல­ன­யவுப் பிரிவு  கடந்த 2015 ஆம் ஆண்டு ஜன­வரி 21 ஆம் திகதி அமைச்­ச­ர­வையில் எடுக்­கப்ப்ட்ட தீர்­மா­னத்­துக்கு அமைய  2015 பெப்­ர­வரி மாதம் 13 ஆம் திகதி பொலிஸ் மா அதி­பரின் கீழ் ஸ்தாபிக்­கப்ப்ட்­டது. பொலிஸ் மா அதி­பரின் கட்­டுப்­பாட்டில் உள்ள இந்த விசா­ரணைப் பிரிவின் பிர­தா­னி­யக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதி­பராக் ஔள்ள நிலையில்  அங்கு 120 அதி­கா­ரிகள் உள்­ளனர். வர்­களில் பட்டப் பின் படிப்பை நிறைவுச் எய்தோர், பட்­ட­தா­ரி­களும் உள்­ளனர்.  இவர்­க­ளுக்கு விஷேட பயிற்­சிகள் அளிக்­கப்ப்ட்டே  கட­மையில் ஈடு­ப­டுத்­தப்ப்ட்­டுள்­ளனர்.

 இந் நிலையில் நிதிக் குற்றப் புல­னாய்வுப் பிரிவு ஆரம்­பிக்­கப்ப்ட்டு இது­வரை 335 முறைப்­பா­டுகள் அவர்­க­ளுக்கு கிடைக்கப் பெற்­றுள்­ளன. அவற்றில் 89 முறைப்­பா­டுகள் தொடர்பில் விசா­ர­ணைகள் நிறைவுச் செய்­யப்ப்ட்டு கோவைகள் சட்ட மா அதி­பரின் ஆலோ­ச­னை­க­ளுக்­காக அனுப்­பட்­டுள்­ளன.

 அத்­துடன் 12 வழக்­குகள் சந்­தேக நபர்­க­ளுக்கு எதி­ராக தககல்ச் எய்­யப்ப்ட்­டுள்­ளன.  மேலும் 115 முறைப்­பா­டுகள் வேறு நிரு­வன்­னக்­க­ளுக்கு விசா­ர­ணை­க­ளுக்கு அனுப்­பட்­டுள்­ள­துடன் சில குற்றம் ஒன்ரு வெளிப்­ப­டா­ததன் கார­ண­மாக  மூடப்­பட்­டுள்­ளன.

மேலும் 131 முறைப்­பா­டுகள் மீதான விசா­ர­ணைகள் தற் சமயம் நிலு­வையில் விசா­ர­ணையில் உள்­ளது.

தாக்கல்ச் செய்­யப்ப்ட்­டுள்ள வழக்­குகள் விபரம்:

விசா­ரணை முடி­வ­டைந்து தககல் மேல் நீதி­மன்றில் தககல்ச் எய்­யப்ப்ட்­டுள்ள வழக்­குகள் பட்­டி­யலை எம்மால் வெளி­பப்­டுத்த முடியும்.

திவி நெகும திணைக்­க­ளத்­துக்கு சொந்­த­மான 36 மில்­லியன் ரூபாவை மோசடி செதமை தொடர்பில்  முன்னாள் அமைச்சர் பசில் ராஜ­பக்ஷ, திவி நெகும முன்னாள் பணிப்­பாளர் அமித் கித்­சிறி ரண­வக்க ஆகி­யோ­ருக்கு எதி­ராக  கொழும்பு மேல் நீதி­மன்றில் வழக்கு தாக்கல்ச் செய்­யப்ப்ட்­டுள்­ளது. ச,தொ.ச. நிரு­வ­னத்தில் இடம்­பெற்ற  38 இலட்சம் ரூப மோசடி தொடர்பில்  முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்­ணான்டோ, முன்னாள் ச.தொ.ச. பனிப்­பா­ளர்­களில் ஒரு­வ­ரான  தாஜா மொஹிதீன் ஷாகிர், ச.தொ.ச. முன்னாள் தலைவர் நலின் ருவன் ஜீவ ஆகி­யோ­ருக்கு எதி­ராக குரு­ணாகல் மேல் நீதி­மன்றில்  வழக்கு தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளது.

பிணை­யங்கள் மற்றும் பங்குப் பரி­வர்த்­தனை ஆணைக் கூழ்வின் 50 இலட்சம் ரூபாவை இளை­ஞர்­க­ளுக்­கான நாளை அமைப்­புக்கு  மோச­டி­யாக கொடுத்­தமை தொடர்பில்  அந்த ஆணைக் குழுவின் முன்னாள் பணிப்­பாளர் நாயகம்  தம்­மிக மஞிர பெரேரா,  நாலக ஹர்ஷ ஜீவ கொட­ஹேவா, மொஹம்மட் நவ்பர் இப­ராஹீம்,  ஆகி­யோ­ருக்கு எதி­ராக வழக்கு கொழும்பு மேல் நீதி­மன்றில் தாக்கல் செய்­யப்ப்ட்­டுள்­ளது.

பீபல்ஸ் லீசிங் நிறு­வ­னத்­துக்கு சொந்­த­மான  388 மில்­லியன் ரூஇ­பாவை மோச­டி­யாக பயன்­ப­டுத்­தி­யமை தொடர்பில்  செனின் ட்ரஸ்ட் த்கனியார் நிறு­வ­னத்தின் பணிப்­பா­ள­ரான  கிங்ஸ்லி சந்­தன குன­வர்­தன,  பிரதி முகா­மை­யாளர்  சஞ்­ஜீவ பண்­டார நாயக்க,  பணிப்­பாளர்  வென்­னப்­புலி ஆரச்­சிகே சுசந்த,  பணிப்­பாளர் வெள்­ள­வத்த ஆரச்­சிகே துமித்த சத்­து­ரங்க சில்வா ஆகி­யோ­ருக்கு எதி­ராக வழக்கு கொழும்பு மேல் நீதி­மன்ரில் தாக்கல்ச் செய்­யப்ப்ட்­டுள்­ளது.

இதே நான்கு  நன்கு நபர்­க­ளுக்கும் எதி­ராக கொழும்பு மேல் நீதி­மன்றில் 202 மில்­லியன் ரூபா,  50 இலட்சம் ரூபா ஆகி­ய­வற்றை மோச­டி­யாக பயன்­ப­டுத்­தி­யமை தொடர்­பிலும் இரு வேறு வழக்­குகள் நிதிக் குர்ரப் புல­ன­யவுப் பிரி­வி­னரால் தககல்ச் செய்­யப்ப்ட்­டுள்­ளன.

இத­னை­விட தொலை­தொ­டர்­புகள் ஆணைக் கூழ்வின்  600 மில்­லியன் ரூபாவை மோச­டி­யாக பயன்­ப­டுத்­தி­யமை தொடர்பில்  முன்னாள் ஜன­ட­ஹி­பதி செயலர் லலித் வீர­துங்க, முன்னாள் தொலை­தொ­டர்பு ஆணைக் குழு பணிப்­பாளர் அனுஷ பெல்­பிட்ட ஆகி­யோ­ருக்கு எதி­ரா­கவும் கொழும்பு மேல் நீதி­மன்ரில் வழக்கு தாக்கல்ச் எய்­யப்ப்ட்­டுள்­ளது.

 64 மில்­லியன் ரூபாவை இலஞ்­ச­மாக கோரி அதில் 15 மில்­லியன் ரூபாவை பெற்­றுக்­கொண்டு எஞ்­சிய தொகையை பெற அச்­சு­ருத்­தி­யமை தொடர்பில் முன்னாள் மேல் மாகாண முத­ல­மைச்சர் பிர­சன்ன ரண­துங்க, அவ­ரது மனைவி மொரின் ஸ்டெலா ரண­துங்க, நரேஜ் குமார் பாரிக் ஆகி­யோ­ருக்கு எதி­ராக கொழும்பு மேல் நீதி­மன்றில் வழக்கு தாக்கல் செய்­யப்ப்ட்­டுள்­ளது.

 மள்­வா­னையில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜ­ப­க்ஷ­வினால் உழைத்த வழி முறையை வெளிப்­ப­டுத்த முடி­யாது சேர்க்­கப்­பட்ட 200.03 மில்­லியன் ரூபா பெறு­ம­தி­யான 16 ஏக்கர் காணி மற்றும் மாளைகை தொடர்பில் அவ­ருக்கு எதி­ராக கம்­பஹா மேல் நீதி­மன்றில் வழக்கு தாக்கல்ச் செய்­யப்ப்ட்­டுள்­ளன.

கவர்ஸ் கோபரேட் செர்­விசஸ் நிறு­வனம் ஊடாக 30 மில்­லியன் ரூபாவை சுத்­தி­க­ரித்­தமை தொடர்பில் பாரா­ளௌ­மன்ற உறுப்­பினர் நாமல் ராஜ­பக்ஷ,  இந்­திக பிரபாத் கரு­ணா­ஜீவ, சுஜானி போகொல்­லா­கம,  இரேஷா சில்வா, நித்­திய செனானி சம­ர­நா­யக்க அகை­யோ­ருக்கு எதி­ராக கொழும்பு மேல் நீதி­மன்றில் வழக்கு தாக்கல்ச் எய்­யப்ப்ட்­டுள்­ளது.

 இத­னை­விட  திவி நெகும  இசு­ருமத் வீட­மைப்பு திட்டம் தொடர்பில்  அனு­ம­தி­யில்­லாமல் 2.99 பில்­லியன் ரூபாவை மோச­டி­யாக பயன்­ப­டுத்­தி­யமை தொடர்பில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜ­பக்ஷ,  திவி நெகும முன்னாள் பணிப்­பாளர் ஆர்.கே.கே. ரண­வக்க, பொரு­ளா­தார அமைச்சின் முன்னாள் செயலர் நிஹால் ஜய­தி­லக அகை­யோ­ருக்கு எதி­ராக கொழும்பு மேல் நீதி­மன்றில் வழக்கு தாக்கல்ச் செய்­யப்ப்ட்­டுள்­ளது.

அத்­து­இடன் 2015 ஆம் ஆண்டு கலண்டர் அச்­சிட 20,400,000 ரூபாவை  பெற்­றுக்­கொன்டு தேர்­தல்கள் சட்­டத்தை மீறி­யமை தொடர்பில் திவி நெகும பணிப்­பாளர் ஆர்.கே.கே. ரண­வக்க, முன்னாள் அமைச்சர் பசில் ராஜ­பக்ஷ ஆகி­யோ­ருக்கு எதி­ராக வழக்கு தாக்கல்ச் எய்­யப்ப்ட்­டுள்­ளது.

இத­னை­விட தொலை தொடர்பு வசதி கொண்ட 80 மில்­லியன் ரூபா பெறு­மதி கொன்ட வாகனம் ஒன்ரு யோசித்த உள்­ளி­டோ­ரிடம் இருந்து அரச உட­மை­ய­க­கப்ப்ட்­டுள்­ளது. அத்­துடன் அந்த குழு­வி­ட­மி­ருந்தே 157.5 மில்­லியன் ரூபா பணம் அர­சு­ட­மை­ய­க­கப்ப்ட்டு திறை சேரியில் வர­வி­டப்ப்ட்­டுள்­ளது.

இத­னை­விட 50 மில்­லியன் ரூபா பெறு­ம­தி­யான காணி, 150 மில்­லியன் பெறு­ம­டி­யான காணி ஆகி­ய­வற்­றையும் 200 மில்­லியன் ரூபா பெறு­ம­தி­யான மள்­வானை மாளி­கை­யையும் அரச உட­மை­யாக்க முயற்­சிகள் இடம்­பெற்று வரு­கின்­றன.

 இந்த விசா­ர­ணை­களில் பல கறுப்புப் பண சுத்­தி­க­ரிப்பு நட­வ­டிக்­கைகள் வெளி­நா­டுகள் ஊடாக முன்­னெ­டுக்­கப்ப்ட்­டுள்­ளதால் அந் நாடு­களின் ஒத்­து­ழிப்­புடன் விசாரணைகள் இடம்பெறுகின்ரன. அவ்வாறு 25 நாடுகளுடன் நாம் அந்தியோன்ய தொடர்புகள் மூலம் தகவல்களைப் பெற்ரு விசாரணைச் எய்கின்றோம். இது தொடர்பில் அந் நாடுகளிடம் 86 கோரிக்கைகளை நாம் முன்வைத்துள்ள நிலையில்  அவற்ரில் 36 கோரிக்கைகள் தொடர்பில்  தகவல்கள் கிடைத்த வண்ணம் உள்ளன.

அதன்படி ஐக்கிய இராச்சியத்தில் இருந்து இரு சம்பவங்கள் தொடர்பிலும், சிங்க்ஜப் பூர் ஊடாக 13 கோரிக்கைகள் தொடர்பிலும் இந்தியாவில் இருந்து 13 கோரிக்கைகள் தொடர்பிலும் அமெரிக்கவைடம் இருந்து 8 கோரிக்கைகள் தொடர்பிலும் எமக்கு தகவல்கள் கிடைத்த வண்ணம் உள்ளன.

 இந்த விசாரணைகள் அனைத்தும் மிக நுணுக்கமாக முன்னெடுக்கப்ப்ட்டுவருகின்றன. எனவே அதன் பிரதி பலன்களையும் விரைவில் தெரிந்துகொள்ளக் கூடியதாக இருக்கும் என்றார்.