மழைவீழ்ச்சி அதிகமாக பதிவான காரணத்தினால் பதுளை திக்ஹாரவ பகுதியில் நிலத்தாழிறக்க அபாயம் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ள காரணத்தினால் அப்பகுதியில் வசித்த 100 குடும்பங்கள் தற்காலிகமாக வெளியேற்றப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பேச்சாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.

உமா ஓயா திட்டத்தின் காரணமாக மேற்குறிப்பிட்ட பகுதியில் நீர் வழிந்து ஓட ஆரம்பித்துள்ளது.
இந்நீரின் அளவு அதிகமான காரணத்தினாலேயே நிலம் தாழிறங்கும் அபாயம் காணப்படுகின்ற பகுதியில் வாழும் குடும்பங்களை அகற்ற அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தீர்மானித்துள்ளது.
இவ்வாறு வெளியேற்றப்பட்ட குடும்பங்கள் பண்டாரவளை, பிந்துனுவெவ பகுதியிலுள்ள இளைஞர் படையணியின் பயிற்சி தளத்தில் தற்காலிகமாக தஞ்சம் புகுந்துள்ளன.
இதனால் கொழும்பு – பதுளை பிரதான வீதியும் திக்ஹாராவ பகுதியும் நேற்று மாலை வேளையில் ஒரு மணித்தியாலமாக மூடி வைக்கப்பட்டிருந்து பின்னர் போக்குவரத்துக்காக திறந்துவிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் 5 மாதங்களின் பின் னர் பதுளை, பண்டாரவளை ஆகிய பகுதிகளுக்கு மழைவீழ்ச்சி பெருமள வில் பதிவாகியுள்ளதாக நேற்றைய தினம் வானிலை அவதான நிலையம் சுட்டிக்காட்டியிருந்தமையும் குறிப்பி டத்தக்கதாகும்.