தனது மனைவி ஏனைய ஆண்களுக்கு எழுத்து வடிவ செய்திகளை அனுப்பியுள்ளதை கண்டறிந்து சினமடைந்த கணவர் ஒருவர், தனது மனைவிக்கு தண்டனை அளிக்கும் முகமாக அவரை நிர்வாணமாக வீதி வழியாக நடந்து செல்வதற்கு நிர்ப்பந்தித்த சம்பவம் அமெரிக்க நியூயோர்க் நகரில் இடம்பெற்றுள்ளது.

மனைவியால் ஏனைய 7 ஆண்களுக்கு அனுப்பப்பட்டிருந்த எழுத்து வடிவ செய்திகளை அவதானித்து சினமடைந்து குறிப்பிட்ட கணவர், "நீ அழகாக இருக்கிறாய் என்றும் உன்னுடன் இணைந்து வாழ வேண்டும் எனவும் நான் அன்று கூறிய வார்த்தைகளுக்காக வெட்கமடைகிறேன். அதற்கான விலையை நீ செலுத்த வேண்டும்" எனத் தெரிவித்து தனது மனைவியை நியூயோர்க் நகர வீதியில் இவ்வாறு நிர்வாணக் கோலத்தில் இறங்கி நடக்க நிர்ப்பந்தித்ததுடன் அந்தக் காட்சியை வீடியோ புகைப்படக்கருவி மூலம் படமெடுத்து இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

அந்தப் பெண் தான் எழுத்துவடிவ செய்திகளை அனுப்பிய ஆண்களுடன் தவறான உறவு எதையும் கொண்டிருக்கவில்லை என வலியுறுத்திய போதும் அதைச் செவிமடுக்க அவரது கணவர் மறுத்துள்ளார்.

" உன்னுடன் உரையாடியவர்கள் நீ அதற்கு தகுதியுடையவளா என்பதை அறிந்து கொள்ளட்டும். நான் உன்னுடன் இருக்கையில் நீ 7 ஆண்களுடன் தொடர்பில் இருந்துள்ளதை மன்னிக்க முடியாது" எனத் தெரிவித்த அந்தக் கணவர், காதல் என்ற வார்த்தை மற்றும் புகைப்படங்களுடன் முத்தமிடல், பற்றி உரையாடுவதை சாதாரண விடயமாக ஒதுக்க தான் முட்டாளில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

முதலில் உடலில் துவாய் ஒன்றைக் கட்டிக் கொண்டு ஓடிய அந்தப் பெண் பின்னர் அந்த துவாய் அகற்றப்பட்டு முழு நிர்வாணமாக ஓட நிர்ப்பந்திக்கப்படுகிறார்.

இதன்போது அவர் தனது கைகளையும் மோட்டார் சைக்கிளை மூடப் பயன்படும் உறையையும் பயன்படுத்தி தனது நிர்வாண உடலை மறைக்க முயற்சிப்பது அந்தக் காணொளிக் காட்சியில் பதிவாகியுள்ளது.

இந்நிலையில் சமூக இணையத் தளங்களில் வெளியிடப்பட்டுள்ள மேற்படி காணொளிக் காட்சியால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.