மன்னார் மற்றும் அதனை சூழ­வுள்ள பகு­தி­களில்  எதிர்­வரும் 31 ஆம் திகதி திங்­கட்­கி­ழமை 9 மணி­நேர நீர் வெட்டு  அமு­லாகும் என தேசிய நீர் வழங்கல் வடி­கா­ல­மைப்புச் சபை அறி­வித்­துள்­ளது.

எதிர்வரும் 31 ஆம் திகதி காலை 9 மணி­முதல்  மாலை 6 மணி வரை குறித்த நீர் வெட்டு அமுல்­ப­டுத்­தப்­ப­டு­வ­தோடு ஆசிய அபி­வி­ருத்தி வங்கி  செயற்­ட்­டத் தின் ஐந்தாம்  கட்­டத்தின்  கீழுள்ள நீர் குழாய்  பிர­தான நீர் குழா­யுடன்  இணைக்­கப்­ப­டு­வதால் மேற்­கு­றித்த நீர் வெட்டு அமுல்­ப­டுத்­தப்­படும் என தேசிய நீர் வழங்கல் வடி­கா­ல­மைப்புச் சபை மேலும் அறிவித்துள்ளது.