அத்­தி­யா­வ­சிய சேவை பிர­க­ட­னத்தை உட­ன­டி­யாக வாபஸ் பெறுங்கள்

Published By: Priyatharshan

29 Jul, 2017 | 12:20 AM
image

தொழிற்­சங்க போராட்­டத்தை முடக்கும் நோக்­கு­டனே எரி­பொருள் வழங்­கலை அத்­தி­யா­வ­சிய சேவை­யாக அர­சாங்கம் பிர­க­டனம் செய்­துள்­ளது. ஆகவே குறித்த பிர­க­ட­னத்தை அர­சாங்கம் உடன் வாபஸ் பெற வேண்டும் என ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணியின் கூட்டு எதிர்க்­கட்சி ஆத­ரவு பாரா­ளு­மன்ற உறுப்­பினர் தினேஷ் குண­வர்­தன கோரிக்கை விடுத்தார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று வியா­ழக்­கி­ழமை நடை­பெற்ற  அத்­தி­யா­வ­சிய சேவை­க­ளாக பெற்­றோ­லிய உற்­பத்­திகள், திரவ எரி­வாயு உட்­பட அனைத்து எரி­பொருள் தொடர்பில் ஜனா­தி­ப­தியால் பிர­சு­ரிக்­கப்­பட்ட அதி­வி­சேட வர்த்­த­மானி பத்­தி­ரி­கை­யினை அங்­கீ­க­ரிப்­பது தொடர்­பான விவா­தத்தில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் உரை­யாற்­று­கையில்,

அர்­ஜுன ரண­துங்க இலங்­கைக்கு உலக கிண்­ணத்தை வென்று கொடுத்து கெப்டன் கூல் என்ற அந்­தஸ்தை பெற்­ற­வ­ராவார். அதே­போன்று இன்னும் அமை­தி­யா­கவும் எந்­த­வொரு பதற்­றமும் இல்­லாமல் தனது கட­மையை உரிய முறையில் முன்­னெ­டுத்து வரு­கின்றார். அதற்கு நான் பாராட்­டு­கின்றேன். எனினும் அர­சாங்கம் மக்கள் பலம் இல்­லாத கார­ணத்­தினால் ஆயுத பலத்தை எடுக்க முனை­கின்­றது. இதன்­ பி­ர­காரம் தொழிற்­சங்­க­வா­தி­களின் உரிமை போராட்­டங்­களை தடுத்து நிறுத்­து­வ­தற்­காக அர­சாங்கம் எரி­பொருள் வழங்­கலை அத்­தி­யா­வ­சிய சேவை­யாக பிர­க­ட­னப்­ப­டுத்­தி­யுள்­ளது. இந்த நட­வ­டிக்­கை­க­ளுக்­காக அர­சாங்கம் வெட்­கப்­பட வேண்டும். 

அது­மாத்­தி­ர­மின்றி கொலன்­னாவ  கும்­பலை   வைத்துக்கொண்டு அர­சாங்கம் தாக்­குதல் நடத்­தி­யது. இரத்தம் சிந்தும் அள­விற்கு தாக்­குதல் நடத்­தி­யுள்­ளனர். ஆகவே ஆயு­தத்தை தூக்கும் அள­விற்கு நிலைமை மாறி­யுள்­ளது. இரா­ணு­வத்தை குவித்து தொழிற்­சங்க போராட்­டத்தை முடக்­கினர். இதற்கு இட­ம­ளிக்க முடி­யாது. ஆகவே அர­சாங்கம் பிர­க­ட­னப்­ப­டுத்­திய அத்­தி­யா­வ­சிய சேவை பிர­க­ட­னத்தை உடனே வாபஸ் பெற வேண்­டும். 

தற்­போது அர­சாங்­கத்­திற்கு ஐக்­கிய தேசியக் கட்­சிக்கும் சுதந்­தி­ரக்­கட்­சிக்கும் இடையில்  போர் நடக்­கின்­றது. இதன் வெளி­ப்பா­டா­கவே ஐக்­கிய தேசியக் கட்சி பாதாள கும்பல் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி ஆத­ரவு தொழிற்­சங்க தலை­வர்­களை தாக்கி அவர்­களை கைதும் செய்­துள்­ளது. ஆகவே இதற்கு இட­ம­ளிக்க முடி­யாது. 

 ஆட்­சியை கைப்பற்றுவதற்கு  பாதாள கும்பலை வைத்து ஆட்சி செய்ய முற்படு கின்றது.  இந்த கோரிக்கைகளை பிரதமரிடம் கோரி ஒன்றும் ஆகப் போவதில்லை. ஆகவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் நான்  கோருகின்றேன். குறித்த பிரகடனத்தை வாபஸ் பெற வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58