யாழ். கொடி­காமம் பொலிஸ்­ நி­லை­யத் ­தைச் ­சேர்ந்­த­ பொ­லிஸ்­ உத்­தி­யோ­கத்தர் ஒருவர் மீது­ நேற்று முன்­தி­ன­ம் இ­ர­வு ­இ­னந்­தெ­ரி­யா­த ­கு­ழு­வினர் தாக்­குதல் நடத்­தி­யுள்­­ளனர். 

இச்­சம்­ப­வத்தில் யாழ். கொடி­காமம் பொலிஸ் ­நி­லை­யத்­தைச் ­சேர்ந்த உத­விப்­பொலிஸ் பரி­சோ­த­க­ரான சிந்­துராஜ் (வயது 28) என்ற பொலிஸ் உத்­தி­யோ­கத்­தரே  தாக்­கப்­பட்­ட­தா­க­பொ­லி­ஸார்­தெ­ரி­வித்­துள்­ளனர்.

இச்­சம்­பவம் தொடர்­பாக மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது,

கொடி­காமம் பொலிஸ் நிலை­யத்தில் இருந்து கட­மையை முடித்­து­விட்டு மோட்­டார்­சைக்­கி­ளில்­சென்­று­கொண்­டி­ருந்­த­போது வட­ம­ராட்சி துன்­னாலைப் பகு­தி­யிலே இந்­த­தாக்­கு­தல்­சம்­பவம் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது

தாக்­கு­த­லுக்கு இலக்­கான பொலிஸ்­உத்­தி­யோ­கத்­தர்­சா­வ­கச்­சே­ரி­வைத்­தி­ய­சா­லை­யில்­சி­கிச்­சைக்­காக அனு­ம­திக்­கப்­பட்­டுள்ளார்.  தாக்­கு­த­லுடன் தொடர்­பு­டை­ய­சந்­தே­க­ந­பர்­கள்­ இ­து­வ­ரை­அ­டை­யா­ளம்­ கா­ணப்­ப­ட­வில்­லை­என்­ப­துடன், அவர்­களைக் கைது­செய்­வ­தற்­கா­ன­வி­சா­ர­ணை­கள்­முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன.

அண்மையில் மணல்ஏற்றிச்சென்றபோது பருத்தித்துறை பொலிஸாரின்துப்பாக்கிப்பிரயோகத்திற்கு இலக்காகி உயிரிழந்த இளைஞனின்ஊரான துன்னாலைக்கு அருகில்இந்ததாக்குதல்சம்பவம்இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்