சம்­பந்தன் மௌனி­யாக இ­ருப்­பது சரியா? எதற்கு எதிர்க்­கட்சித் தலைவர் பதவி; தினேஷ் கேள்வி

Published By: Priyatharshan

28 Jul, 2017 | 11:54 AM
image

பாரா­ளு­மன்ற ஜன­நா­யகம் குழி­தோண்டி புதைக்­கப்­பட்டுக் கொண்­டி­ருக்கும் தறு­வாயில் எதிர்க்­கட்சித் தலைவர் இரா.சம்­பந்தன் மௌனி­யாக அமர்ந்­துள்ளார் என பகி­ரங்­க­மாகக் குற்றம் சாட்­டிய ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் கூட்டு எதிர்­க்கட்சி பாரா­ளு­மன்ற உறுப்­பினர் தினேஷ் குண­வர்த்­தன  52 பேரை கொண்ட  கூட்டு எதி­ரணி   இந்த பிரச்­சி­னைக்கு தலை­யிட வேண்­டிய நிலைமை ஏற்­பட்­டுள்­ள­தா­கவும் குறிப்­பிட்டார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று வியா­ழக்­கி­ழமை நடை­பெற்ற   அத்­தி­யா­வ­சிய சேவை­க­ளாக பெற்­றோ­லிய உற்­பத்­திகள், திரவு எரி­வாயு, உட்­பட அனைத்து எரி­பொருள் தொடர்பில் ஜனா­தி­ப­தியால் பிர­சு­ரிக்­கப்­பட்ட அதி­வி­சேட வர்த்­த­மானி பத்­தி­ரி­கை­யினை அங்­கீ­க­ரிப்­பது தொடர்­பான விவா­தத்தில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். 

அவர் மேலும் உரை­யாற்­று­கையில், 

அர­சாங்­கத்­திற்குள் பாரி­ய­ளவில் மோதல்கள் நடக்­கின்­றன. ஐக்­கிய தேசியக் கட்­சிக்கும் சுதந்­திரக் கட்­சிக்கும் பாரி­ய­வி­லான மோதல்கள் இடம்­பெ­று­கின்­றன. இதன் வெளிப்­பா­டா­கவே தொழிற்­சங்க போராட்­டங்கள் மீது தாக்­குதல் நடத்­தப்­ப­டு­கின்­றன. ஐக்­கிய தேசியக் கட்சி தனது பாதாள கோஷ்­டி­களை வைத்து ஆட்சி செய்ய பார்க்­கின்­றது.

அத்­துடன் நேற்று ( நேற்று முன் தினம்) மிளகு விலை­யேற்றம் தொடர்­பாக சபை ஒத்­தி­வைப்பு வேளை பிரே­ர­ணை­யொன்றை சமர்ப்­பிப்­ப­தற்கு ஏற்­க­னவே கட்சி தலைவர் கூட்­டத்தில் இணக்கம் ஏற்­பட்­டன. என்­றாலும் நேற்­றைய  தினம் (நேற்று முன் தினம்) சபா­நா­யகர் கரு ஜெய­சூ­ரிய பல­வந்­த­மாக சட்­டங்­களை வாக்­கெ­டுப்­பின்றி நிறை­வேற்றி விட்டு எமக்கு ஒதுக்­கப்­பட்ட ஒத்­தி­வைப்பு வேளை பிரே­ர­ணையும் இல்­லாமல் செய்­தனர். 

என்­றாலும் நாட்­டிலும் பாரா­ளு­மன்­றத்­திலும் ஜன­நா­யகம் குழித்­தோண்டி புதைக்­கப்­பட்டு கொண்­டி­ருக்கும் தரு­வாயில் எதிர்க்­கட்சி தலைவர்   ஒருவர் உள்ளார். எதுவும் பேசமால் மௌனி­யாக அம­ரந்­துள்ளார். அப்­ப­டி­யாயின் எதற்கு எதிர்க்­கட்சி தலைவர் பதவி வேண்டும்? 52 உறுப்­பி­னர்­களை கொண்ட கூட்டு எதிர்க்­கட்சி பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களே தலை­யிட்டு தீர்க்க வேண்­டி­யுள்­ளது. ஆகவே இது தொடர்பில் ஆராய வேண்டும் என்றார்.

ராஜி­த­வுக்கு என்ன அதி­காரம் 

 ராஜ­ப­க்ஷ­வி­னரை கைது செய்­யப்­போ­வ­தாக அமைச்­ச­ரவை இணைப்­பேச்­சாளர் ராஜித சேனா­ரத்ன கூறி­யுள்ளார். இவ்வாறு கூறுவதற்கு அவர் நீதி அமைச்சரா? அவர் தனது சட்டைக் பையினுள்ளா சட்டத்தினை வைத்திருக்கின்றார். நாட்டில் அமைதியை நிலையாட்டிய தலைவரை இவர்கள் நினைத்த படி கைது செய்ய முடியுமா? இதுவா நல்லாட்சி அரசாங்கத்தின் பொறுப்பு என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17
news-image

கடற்றொழிலாளர்களுக்கான புதிய சட்டமூல வரைபு தொடர்பாக...

2024-04-20 00:08:11