யாழ்ப்பாணம் திருநெல்வேலி கலட்டிச் சந்தியில் இளைஞர் ஒருவர் மீது மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டில் குறித்த இளைஞர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த வாள்வெட்டுச் சம்பவத்தால் இளைஞனின் கைவிரல் துண்டிக்கப்பட்ட நிலையில் அவர் யாழ்.போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

யாழ்ப்பாணம் புலோலி பகுதியைச் சேர்ந்த தினேஸ்குமார் சலோஜிதன் (வயது 18) என்ற இளைஞரே வாள்வெட்டுக்கு இலக்கானவராவார்.

கலட்டிச் சந்தியில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் வேலைக்காக வந்த குறித்த இளைஞரின் கழுத்து மற்றும் வயிற்றுப் பகுதியில் வாளால் வெட்டியுள்ளனர். 

வாள்வெட்டுக்கு இலக்காகிய இளைஞர் பொது மக்களினால் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

குறித்த வாள்வெட்டு சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.