நீண்ட வறட்சிக்குப் பின்னர் பதுளை மாவட்டத்தில் பல பகுதிகளில் இன்று மதியம் காற்றுடன் கூடிய மழை பெய்துள்ளது.

 

பதுளை மாவட்டத்தில் கடந்த காலங்களில் கடுமையான வறட்சி ஏற்பட்டிருந்தது. இதன் காரணமாக விவசாயிகள் பாரிய நஷ்டத்தினை எதிர்கொண்டிருந்ததோடு  குடிநீருக்காக மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டிருந்தனர்.

இந்நிலையில் பதுளை மாவட்டத்தில் பல பகுதிகளில் மழைபெய்து வருகின்றமையினால் மக்கள் தமது மகிழ்வை வெளிப்படுத்தி வருகின்றனர்.