(எம்.ஆர்.எம்.வஸீம்)

கலந்துரையாடல் மூலம் பிரச்சினையை தீர்ப்பதாக கூறிய அரசாங்கம் இராணுவத்தை பயன்படுத்தி தொழிற்சங்க போராட்டத்தை அடக்கியதை வன்மையாக கண்டிக்கின்றோம். அத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தாக்கிய குண்டர்களுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என முன்னாள் அமைச்சரும் லங்கா சமசமாஜ கட்சியின் செயலாளருமான திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.

Image result for திஸ்ஸ விதாரண virakesari

லங்கா சமசமாஜ கட்சி காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துதெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.