டயபடீக் ரெட்டினோபதியை குணப்படுத்தும் சத்திர சிகிச்சை

Published By: Robert

27 Jul, 2017 | 12:32 PM
image

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள், தங்களது கண்களைக் கவனிக்கத் தவறினால் பார்வைதிறன் குறித்த பாதிப்பு அதிகமாக ஏற்படும். அதிலும் குறிப்பாக இவர்கள் சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்ளவில்லை என்றால், கண்களில் உள்ள ஓப்டிக் நரம்பு மற்றும் கண்களின் தசைகள் பாதிக்கப்படும். இதன் காரணமாக கண்களை அசைக்க முடியாத நிலை உருவாகும். 

சர்க்கரை நோய், விழித்திரைகளைப் பாதிப்பதைத்தான் டயபடீக் ரெட்டினோபதி என்று குறிப்பிடுகிறார்கள். இதன் காரணமாக கண்களுக்கு புலப்படாத இரத்தக் குழாய்களின் உட்சுவரில் கொழுப்பு தங்கி, அதன் நடுச்சுவரில் உள்ள தசைகளின் செயல்பாட்டிற்கு இடையூறு செய்து, அதனை செயலிழக்க செய்துவிடுகின்றன. இதன் விளைவாக கண்ணின் உள்திரையில் பாதிப்பு ஏற்பட்டு, கண்ணில் உள்ள ரத்த நாளங்கள் பலவீனமாகி, இரத்த கசிவு ஏற்பட்டு, பார்வைத்திறனைப் பாதிக்கின்றன.

எம்முடைய விழித்திரையில் அதிகளவிலான ரத்த நாளங்கள் அமையப் பெற்றுள்ளன. சர்க்கரை நோய் இந்த சிறிய ரத்த குழாய்களை பாதிக்கிறது. இவை வலுவிழக்கும் போது, விழித்திரையில் நீர் அல்லது குருதியை கசியவிடுகிறது. கண்களில் ஓக்சிஜன் அளவு குறைவாக இருக்கும் போது புதிய இரத்த குழாய்கள் உருவாகும். சிலருக்கு சில நேரங்களில் இரத்த குழாய்கள் வெடித்துவிடும். இதன் காரணமாக விழித்திரையின் முக்கிய பகுதியான மாக்யூலா பாதிக்கப்படுகிறது. இந்நிலையில் விழித்திரையிலிருந்து மூளைக்கு அனுப்பப்படும் பொருட்களின் உருவம் தெளிவில்லாமல் இருப்பதால் நோயாளிக்கு பார்வைத்திறன் பாதிக்கப்படுகிறது.

அதனால் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் 6 மாதத்திற்கு ஒரு முறை கண் பரிசோதனை செய்து கொள்ளவேண்டும். இதனைக் கண்டறிய தற்போது ப்ளுரெசின் ஓன்ஜியோகிராம்  (fluorescein angiogram) என்ற பரிசோதனையை செய்து கண்டறியலாம். இந்த பரிசோதனையின் போது ப்ளுரெசின் என்ற திரவத்தினை நோயாளியின் கையில் ஊசி மூலம் செலுத்தப்படும். அந்த திரவம் விழித்திரையின் ரத்த குழாய்களின் வழியாக பயணிக்கும் போது புகைப்படம் எடுத்து, கசிவின் தன்மையையும், அளவையும் உறுதிப்படுத்திக் கொள்கிறார்கள். இதற்கு கதிர்வீச்சு சிகிச்சை மூலம் நிவாரணம் அளிக்கப்படுகிறது. இதற்கு பிறகு கண்ணிற்குள் அதிகளவிலான இரத்தம் இருப்பதாக கண்டறியப்பட்டால் அவர்களுக்கு விட்ரெக்டமி என்ற சத்திர சிகிச்சை மூலம் அதிகளவிலான ரத்தத்தை அகற்றி விழித்திரை பாதுக்காக்கப்படுகிறது. 

Dr. பத்ரி நாராயணன்.

தொகுப்பு அனுஷா.

தகவல் : சென்னை அலுவலகம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதீத கொழுப்பு பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-04-18 17:30:48
news-image

ஈஸோபாகல் அட்ராஸியா எனும் உணவு குழாய்...

2024-04-17 17:43:31
news-image

நுரையீரல் உயர் குருதி அழுத்த பாதிப்பிற்குரிய...

2024-04-16 17:40:01
news-image

ஓடிடிஸ் மீடியா எனும் நடு காதில்...

2024-04-15 16:27:12
news-image

சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-15 02:57:12
news-image

ஹீட் ஸ்ட்ரோக் எனும் பாதிப்பிற்குரிய சிகிச்சை

2024-04-12 01:31:06
news-image

பிறவி அட்ரீனல் ஹைப்பர்பிளேசியா எனும் சுரப்பியில்...

2024-04-10 22:59:16
news-image

ரூமாடிக் ஹார்ட் டிஸீஸ் எனும் இதய...

2024-04-09 17:25:41
news-image

யாழில் புற்றுநோய் அதிகரிப்பு ! கடந்த...

2024-04-09 09:37:01
news-image

கை நடுக்கம் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-08 18:33:54
news-image

உலக ஆரோக்கிய தினத்தில் உறுதி கொள்வோம்!

2024-04-08 10:00:07
news-image

டெஸ்டிகுலர் கேன்சர் எனும் விரைசிரை புற்றுநோய்...

2024-04-05 20:56:29