நீதிபதி இளஞ்செழியன் மீதான தாக்குதல் ; அட்டனில் சட்டத்தரணிகள் கவனயீர்ப்புப் போராட்டம்

Published By: Robert

27 Jul, 2017 | 12:51 PM
image

யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் மீதான தாக்குதலை கண்டித்தும், உயிரிழந்த மெய்ப்பாதுகாவலருக்கு அனுதாபம் தெரிவித்தும் அட்டன் நீதிமன்ற சட்டதரணிகள் அமைதியான முறையில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை இன்று முன்னெடுத்தனர்.

அட்டன் நீதிமன்ற வாளாகத்தில் குறித்த போராட்டம் இன்று காலை 10 மணி முதல் 10.30 மணிவரை நடைபெற்றது.

கடந்த சனிக்கிழமை யாழ்ப்பாணம் நல்லூர்  பின் வீதியில் இடம்பெற்ற யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் மீதான தாக்குதலை கண்டித்தும், நீதிமன்ற நீதிவான்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரியும் இப் போராட்டம் சட்டதரணிகளால் முன்னெடுக்கப்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் நீதித்துறைக்கு எதிரான தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கின்றோம் என மும்மொழிகளிலும் வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும்  ஏந்தியிருந்தனா்.

ஆர்ப்பாட்டம் நிறைவடைநந்த பின்னர் இன்றைய நாளில் நீதிமன்ற செயற்பாடுகளிலிருந்து விலகியிருப்பதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட சட்டதரணிகள் தெரிவித்தனர்.

இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் சுமார் 25 சட்டத்தரணிகள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடதக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14