மக்களே அவதானம் ! அதிகரித்து வருகிறது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை

Published By: Robert

27 Jul, 2017 | 11:37 AM
image

நாட்டில் வேக­மாக பர­வி­வரும் டெங்கு நோயினால் பாதிக்­கப்­பட்ட பொது­மக்­களின் எண்­ணிக்கை ஒரு இலட்­சத்து 5153 ஆக அதி­க­ரித்­துள்­ள­துடன் உயி­ரி­ழந்­தோரின் எண்­ணிக்கை 301 ஆக உயர்­வ­டைந்­துள்­ளது.  கடந்த இரண்டு நாட்­களில் நாடளா­விய ரீதியில் பதி­வான டெங்கு நோயா­ளர்­களின் எண்­ணிக்கை 1400 ஆக பதி­வா­கி­யுள்­ளது. 

நாட்டில் டெங்கு  நோய் பரவல் மிகவும் வேக­மாக அதி­க­ரித்து வரு­கின்­றது.  இந்த ஆண்டின் ஏழு மாத காலத்தில் இது­வ­ரையில் ஒரு இலட்­சத்து 5,153 நோயா­ளர்கள் அடை­யாளம் காணப்­பட்­டுள்­ளனர். அதேபோல் உயி­ரி­ழந்­த­வர்­களின் எண்­ணிக்­கையும் 301 ஆக உயர்­வ­டைந்­துள்­ளது. நாட்டில் சகல பகு­தி­க­ளிலும் நோயா­ளர்­களின் எண்­ணிக்கை அதி­க­ரித்­துள்­ளது.

இதே­வேளை கடந்த இரண்டு நாட்­களில் நாடு முழு­வ­திலும் பதி­வான டெங்கு நோயா­ளர்­களின் எண்­ணிக்கை 1400 ஆக அதி­க­ரித்­துள்­ளது. இந்த வாரத்­திலும் அதிக நோயா­ளர்­களின் எண்­ணிக்கை பதி­வா­கி­யுள்­ள­தாக டெங்கு தடுப்பு பிரி­வினர் தெரி­வித்­துள்­ளனர். 

அத்­துடன் மேல் மாகா­ணத்தில் டெங்கு நோயா­ளர்­களின் எண்­ணிக்கை அதி­க­ரித்த வண்ணம் உள்­ளது. 44 வீத­மான டெங்கு நோயா­ளர்கள் மேல் மாகா­ணத்தில் இனங்­கா­ணப்­பட்­டுள்­ளனர். கொழும்பு, கம்­பஹா மற்றும் களுத்­துறை ஆகிய மாவட்­டங்­களில் மொத்­த­மாக 46 ஆயி­ரத்து 274 நோயா­ளர்கள் அடை­யாளம் காணப்­பட்­டுள்­ளனர். வட­மா­கா­ணத்தில் மொத்­த­மாக 4 ஆயி­ரத்து 890 நோயா­ளர்­களும் கிழக்கு மாகா­ணத்தில் 9 ஆயிரத்து 100 பேரும் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். 

மிக­ மோ­ச­மாகப் பர­வி­ வரும் டெங்கு நோயினை கட்­டுப்­ப­டுத்தும் நட­வ­டிக்­கை­களை அர­சாங்கம் முன்­னெ­டுத்து வரு­வ­துடன் பாது­காப்பு படை­களைக் கொண்டு குப்­பை­களை அகற்றும் நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன.

தேசிய டெங்கு ஒழிப்பு நிகழ்ச்சி திட்­டத்தின் மூல­மாக அனைத்து ஊட­கங்கள், பாட­சாலை மாண­வர்கள், சுகா­தார அதி­கா­ரி­கள்­ அ­ரச ஊழி­யர்கள், பொது மக்கள், முப்­ப­டை­யினர், பொலிஸ் மற்றும் சிவில் பாது­காப்பு திணைக்க­ளத்தினர்­களின் ஒத்­து­ழைப்­புடன் இந்த வேலைத்­திட்டம் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றது.

இந்த வேலைத்­திட்­டத்தின் கீழ் புகை­யி­ரத நிலை­யங்கள், வைத்­தி­ய­சா­லைகள் பஸ்­த­ரிப்­பிடம், பாடசாலை வளாகங்கள், வியாபார நிலையங்கள், விஹாரைகள் மற்றும் பொது நிலையங்கள் சுத்திகரிக்கப்பட்டன. அத்துடன் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் இந்த டெங்கு ஒழிப்பு பணிகளில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04