Image result for இலங்கை மத்­திய வங்கி virakesari

இலங்கை மத்­திய வங்கி திறை­சேரி முறி­க­ளுக்­கான புதிய முத­னிலை வழங்கல் முறை­யொன்­றினை அறி­மு­கப்­ப­டுத்­தி­யுள்­ளது. இன்­றி­லி­ருந்து நடை­மு­றைக்கு வரும்­வ­கையில், 2015 ஆம் ஆண்டு பெப்­ர­வ­ரி­ மாதத்தி­லி­ருந்து நடை­மு­றையில் காணப்­படும் திறைசேரி முறி­க­ளுக்­கான முழு­மை­யான ஏலவழங்கல் முறை­மைக்கு பதி­லாக குறித்த புதிய முறைமை மாற்­றி­ய­மைக்­கப்­ப­டு­கின்­றது.

அர­சாங்­கத்தின் உள்­நாட்டு கடன் பெறு­கை­க­ளின்­போது போது வினைத்­தி­ற­னையும் வெளிப்­படைத் தன்­மை­யி­னையும் மேலும் அதி­க­ரிப்­பதே குறித்த புதிய முறை­மை­யினை அறி­மு­கப்­ப­டுத்­து­வ­தற்­கான பிர­தான கார­ண­மாகும்.

இந்த புதிய முறை­மை­யா­னது மிகவும் கட்­ட­மைப்­பா­ன­தாக காணப்­ப­டு­வ­துடன் ஒழுங்­கான மாதாந்த திறை­சேரி முறி­களின் வழங்­கல்­களையும் உள்­ள­டக்­கு­கின்­றது.ஒவ்­வொரு மாதாந்த வழங்­க­லா­னது இரண்டு வேறு­பட்ட முதிர்ச்­சி­களை கொண்ட முறித்­தொ­டர்க­ளினை வழங்­கு­வ­துடன், தொடர்­களின் முதிர்ச்­சிக்­கா­லப்­ப­கு­தி­யா­னது சந்தையில் கிடைக்­கத்­தக்க வளங்­க­ளு­டன்ஒத்­துப்­போ­வ­தற்கு எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. ஒவ்­வொரு தொடர்­களின் கீழான வழங்­க­லா­னது, ஒவ்­வொரு அடுத்­து­வரும் கட்­டங்­களின் வெளி­யீ­டு­க­ளினைப்பொறுத்து மூன்று அல்­லது அதற்கு குறை­வான தொடர்ச்­சி­யான கட்­டங்­களில் தாக்­கத்­தினை மேற்­கொள்­கி­றது. 

கட்டம் ஒன்­றா­னது நியா­ய­மான சந்தைக் கோரல்­க­ளி­னூ­டாக போட்­டித்­தன்­மை­யு­டைய பல்­விலை ஏல முறை­மை­யொன்­றினால் அறி­விக்­கப்­பட்ட முழு தொகை­களின் வழங்­க­லினை ஆராயும். எனினும், கட்டம் ஒன்றில்ஏதேனும் குறை­வான ஒதுக்­கீ­டுகள் காணப்­ப­டு­கையில், கட்டம் இரண்­டா­னது தன்­னார்வ வெளி­யீடு அடிப்­ப­டை­யி­லான கோரல்­க­ளுக்­காக திறக்­கப்­படும். கட்டம் இரண்டின் கீழான பிணை­முறி வழங்­க­லா­னது கட்டம் ஒன்றில் தீர்­மா­னிக்­கப்­பட்ட நிறை­யேற்­றப்­பட்ட சரா­சரி விளைவு வீதத்தில் உரு­வாக்­கப்­ப­டு­வ­துடன், கட்டம் ஒன்றில் காணப்­படும் ஏதேனும் குறை­வான ஒதுக்­கீ­டு­க­ளுக்கு வரை­ய­றுக்­கப்­படும். 

மேல­தி­க­மான கேள்­வியின் போது, கட்டம் இரண்டின் வழங்­க­லா­னது, கட்டம் ஒன்றின் ஏல பங்­கேற்­பா­ளர்­களின் செய­லாற்­றத்­திற்­கான விளைவு விகி­தத்தில் பகிர்ந்­த­ளிக்­கப்­படும். முத­னிலை வழங்­க­லிலுள்ள அனைத்து முத­னிலை வணி­கர்கள் மற்றும் அதி­கா­ர­ம­ளிக்­கப்­பட்ட பங்­கேற்­பா­ளர்கள் கட்டம் இரண்டின் கீழ் கோரல்­களை சமர்ப்­பிப்­ப­தற்கு தகு­தி­யா­ன­வர்கள்.

கட்டம் மூன்றில் கட்டம் ஒன்று மற்றும் கட்டம் இரண்டில் ஏதேனும் குறை­வான ஒதுக்­கீ­டுகள் காணப்­பட்டால் முத­னிலை வணி­கர்­க­ளுக்­கி­டையில் மட்டும் நிறை­யேற்­றப்­பட்ட சரா­சரி விளைவு வீதத்தில் கட்­டாய அடிப்­ப­டையில் வழங்­கப்­படும். எனினும், கட்டம் மூன்றின் நிறை­வேற்­று­தலா­னது கட்டம் ஒன்றில் வழங்­கப்­பட்டதொகையின் குறைந்­தது 60 சத­வீத ஏற்­புகள் காணப்­படும் சந்­தர்ப்­பங்­க­ளுக்கு மட்டும் மட்­டுப்­ப­டுத்­தப்­படும். 

எந்­த­வொரு முத­னிலை வணி­கர்­க­ளுக்­கான கட்டம் மூன்றின் வழங்­க­லா­னது கட்டம் ஒன்று மற்றும் கட்டம் இரண்டின் வெற்­றி­கர வழங்­கல்­களின் சத­வீ­தத்தின் எதிர்­ம­றை­யான விகி­தா­சா­ர­மாக இருக்கும். மேலும், ஓர் புதிய செய­லாற்ற மீளாய்வு பொறிமுறையானது முதனிலை வணிகர்களின் காத்திரத்தன்மையான பங்கேற்பினை மதிப்பிடுவதற்காக அறிமுகப்படுத்தப்படும். 

அதேவேளை, முதனிலை வணிகர்கள் மற்றும் முதலீட்டாளர்களின் முதலீட்டு திட்டமிடலினை பெருமளவில் முன்னேற்றும் நோக்குடன் ஓர் காலாண்டு அடிப்படையிலான திறைசேரி முறிகளின் ஏலநாட்காட்டி இலங்கை மத்திய வங்கி யின் வளைத்தளத்தில் முன்கூட்டியே வெளியிடப்படும்.