இலங்கை அணியின் வீரர் அசேல குணரத்னவிற்கு கையில் ஏற்பட்ட உபாதை காரணமாக நான்கு வாரங்களுக்கு ஓய்வு எடுக்க வேண்டும் என்று வைத்தியர்கள் அறிவுறுத்தியுள்ளதாக இலங்கை கிரிக்கட் அணியின் முகாமையாளர் அசங்க குருசிங்க ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியுடன் இன்று காலை இடம்பெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியின் போது அவர் உபாதைக்குள்ளாகியமை குறிப்பிடத்தக்கது. 

லஹிரு குமார வீசிய 14 ஆவது ஓவரில் ஷிகன்தர் தவான் அடித்த பந்து மட்டையின் விளிம்பில் பட்டு ஸ்லிப் திசையில் சென்றபோது அதை பிடியெடுக்க முயற்சித்த குணரத்னவின் இடது கை மணிக்கட்டு பகுதியில் இருக்கும் கட்டை விரலில் முறிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.