மெய்ப்பாதுகாவலரின் பிள்ளைகளை தத்தெடுத்தார் நீதிபதி இளஞ்செழியன்

Published By: Priyatharshan

26 Jul, 2017 | 06:57 PM
image

யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த தனது மெய்ப்பாதுகாவலரான சரத் ஹேமச்சந்திரவின் இரு பிள்ளைகளையும் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தத்தெடுத்துக் கொள்வதாக உறுதியளித்துள்ளார்.

தனது மெய்ப்பாதுகாவலராக 15 வருட காலமாக பணியாற்றிய உப பொலிஸ் பரிசோதகரின் இறுதிக் கிரியை இன்று புதன்கிழமை அவரது சொந்த ஊரான சிலாபத்தில் இடம்பெற்றது.

குறித்த இறுதிக் கிரியையில் கலந்துகொண்டுவிட்டு கருத்து வெளியிடுகையிலேயே யாழ்மாவட்ட மேல் நீதிமன்ற நீதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

எனது உயிரைக் காப்பாற்றுவதற்காக தன்னுயிரை நீத்த எனது மெய்ப்பாதுகாவலருக்கு செய்யும் கடமையாக நான் இதனை கருதுகிறேன்.

அந்த வகையில், குறித்த இரு பிள்ளைகளையும் தனது சொந்த பிள்ளைகளைப் போல பராமரித்து, அன்பு செலுத்தி, கல்வியை போதித்து, தான் இறக்கும்வரை அவர்களது எதிர்காலத்திற்கு தேவையான சகல விடயங்களையும் ஒரு தந்தையின் ஸ்தானத்தில் இருந்து செய்வேன் என இதன் நீதிபதி இளஞ்செழியன் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43