பாலியல் தாக்­குதல் ஏதா­வது இடம்­பெறும் போது உட­ன­டி­யாக  தாக்­கு­த­லுக்­குள்­ளா­கு­ப­வரின் பாது­காப்பு வட்­டா­ரத்­துக்கு எச்­ச­ரிக்கை செய்யும் அணி­யக்­கூ­டிய –  ஒட்­டக்­கூ­டிய  மிகவும் சிறிய உப­க­ர­ண­மொன்றை (ஸ்டிக்கர்)  அமெ­ரிக்க மாஸா­சுஸெட்ஸ் பல்­க­லைக்­க­ழ­கத்தைச் சேர்ந்த பொறி­யி­ய­லா­ளர்கள் உரு­வாக்­கி­யுள்­ளனர்.

அந்த உப­க­ர­ணத்தை ஆடையின்  எந்தப் பகு­தி­யிலும் ஒட்­டிக்­கொள்ள முடியும்.  அந்த உப­க­ரணம் பயன்­பாட்­டா­ளரால் இயக்­கப்­பட்டோ அல்­லது தானாக  சுய­மாக இயங்­கியோ செயற்­படும் ஆற்­றலைக் கொண்­டுள்­ளது. இதன் கார­ண­மாக  அதனை அணிந்­தி­ருப்­பவர் சுய உணர்­வோடு இருக்கும் போது மட்­டு­மல்­லாது மயக்க நிலைக்கு சென்­றி­ருக்கும் போதும் அந்த உப­க­ரணம் அவ­ரது பாது­காப்பு வட்­டா­ரங்­களை  எச்­ச­ரிக்கை செய்யும்.

பயன்­பாட்­டாளர் பாலியல்  ரீதியில் அணு­கப்­ப­டு­வதை அந்த உப­க­ரணம் கண்­ட­றி­கையில், அது உட­ன­டி­யாக அவர்  அதற்கு சம்­ம­தத்­துடன் இருக்­கி­றாரா என வினவி அவ­ருக்கு எழுத்து வடிவ செய்­தியை அனுப்பும்.

இதன்­போது பயன்­பாட்­டாளர் பதி­ல­ளிக்கத் தவறின் அவர் பாலியல் தாக்­கு­த­லுக்கு உள்­ளா­வ­தாக அந்த உப­க­ரணம் ஊகித்து பாரிய எச்­ச­ரிக்கை ஒலியை வெளிப்­ப­டுத்­து­வ­துடன் அவ­ரது பாது­காப்பு வட்­டா­ரத்­துக்கு  பயன்­பாட்­டாளர் இருக்கும் இடம் எங்­குள்­ளது என்­பது தொடர்­பான  வரை­ப­டத்தை உள்­ள­டக்கி  எச்­ச­ரிக்கை தக­வலை அனுப்பும். அத்­துடன் அந்த உப­க­ரணம் சம்­பவ இடத்­தி­லான ஒலி­க­ளையும் பதி­வு­செய்ய  ஆரம்­பிக்கும்.

இது தொடர்பில் அமெ­ரிக்க மாஸா­சுஸெட்ஸ் பல்­க­லைக்­க­ழ­கத்தின் ஊடக ஆய்­வு­கூ­டத்தின் ஆய்­வா­ளர்­களில் ஒரு­வ­ரான இந்­தி­யாவைச் சேர்ந்த  மனிஷா மோகன்  தெரி­விக்­கையில்,  இந்த சிறிய உப­க­ர­ண­மா­னது பாலியல் ரீதி­யான தாக்­கு­தல்­களை இனம்­கண்டு  அறி­வித்து உரிய நேரத்தில் பாது­காப்பு அளிப்­பதை  நோக்­காகக் கொண்டு உரு­வாக்­கப்­பட்­டுள்­ள­தாகக் கூறினார்.