அம்­பாந்­தோட்டை துறை­முக உடன்­ப­டிக்கை சனிக்­கி­ழமை கைச்­சாத்தாகும்

Published By: Robert

26 Jul, 2017 | 10:28 AM
image

Image result for அம்­பாந்­தோட்டை துறை­முக  virakesari

அமைச்­ச­ர­வையில் நேற்று சமர்ப்­பிக்­கப்­பட்ட  அம்­பாந்­தோட்டை துறை­முக உடன்­ப­டிக்கை தொடர்­பி­லான அமைச்­ச­ரவைப் பத்­தி­ரத்­திற்கு அனு­மதி கிடைத்­துள்­ ளது. எனவே, எதிர்­வரும் சனிக்­கி­ழமை குறித்த உடன்­ப­டிக்கை கைச்­சாத்­தி­டப்­ப­ட­வுள்­ள­தாக துறை­மு­கங்கள் மற்றும் கப்­பற்­றுறை அமைச் சர் மஹிந்த சம­ர­சிங்க தெரி­வித்தார். துறை­மு­கங்கள் மற்றும் கப்­பற்­றுறை அமைச் சில் நேற்று மாலை நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இதனைத் தெரி­வித்தார். அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

அம்­பாந்­தோட்டை துறை­முக உடன்­ப­டிக்கை தொடர்­பி­லான அமைச்­ச­ரவைப் பத்­தி­ரத்தை இன்­றைய (நேற்று) அமைச்­ச­ர­வையில் சமர்ப்­பித்தேன்.

 அதற்கு அமைச்­ச­ரவை அனு­மதி வழங்­கி­யுள்­ளது. எனவே குறித்த அனு­மதி இன்­றி­லி­ருந்து அமுலுக்கு வர­வுள்­ளது. ஏனெனில் சமர்ப்­பித்த  அமைச்­ச­ரைவப் பத்­தி­ரத்­தி­லேயே உட­ன­டி­யாக அமுல்­ப­டுத்தும் வகையில் அனு­மதி வழங்­கு­மாறு கேட்­டுக்­கொண்­டி­ருந்­தேன். அதற்­கிணங் அனு­மதி கிடைத்­துள்­ளது.

அமைச்­ச­ர­வையில் நான் முன்­வைத்த தெளி­வூட்­ட­லுக்குப் புறம்­பாக அமைச்­சர்­களும் தமது அபிப்­பி­ரா­யங்­களைத் தெரி­வித்­தனர். எனவே குறித்த பேச்­சு­வார்­ததை ஒரு மணி நேரம் வரையில் நீடித்­தது. குறிப்­பாக ஜனா­தி­பதி மற்றும் பித­மரும் தமது அபிப்­பி­ரா­யங்­க­ளையும் முன்­வைத்­தனர். அத்­துடன் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன குறித்த உடன்­ப­டிக்­கையை நாளை (இன்று) பாரா­ளு­மன்றில் சமர்ப்­பித்து எதிர்­வரும் வெள்­ளிக்­கி­ழமை பாரா­ளுமன்றில் விவாதம் நடத்­து­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கு­மாறும் கேட்­டுக்­கொண்டார். 

அதற்­கி­ணங்க நான் நாளை­க்காலை (இன்று) பாரா­ளு­மன்றில் இவ்­வு­டன்­ப­டிக்­கை­கையை சமர்ப்­பிக்­க­வுள்ளேன். ஆகவே குறித்த உடன்­ப­டிக்­கை­கயை மேலும் வலுப்­ப­டுத்­து­வ­­தற்கு பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் ஆலோ­சனை முன்­வைத்­ததால் அதற்கு இட­ம­ளிப்­ப­தற்கு தயார் என்­கின்ற விட­யத்தை தெரி­யப்­ப­டுத்­து­மாறும் ஜனா­தி­பதி கேட்­டுக்­கொண்­டுள்ளார். 

எனவே பாரா­ளு­மன்றில் சமர்ப்­பித்த பின்னர் சக­லரும் குறித்த உடன்­ப­டிக்­கை­யினை அர­சி­ய­லுக்கு அப்பால் நின்று நாட்டின் அபி­வி­ருத்தி தொடர்பில் அவ­தா­னிக்க வேண்டும் எனவும் கேட்­டுக்­கொள்­கிறேன். ஏனெனில்  குறித்த உடன்­ப­டிக்­கை­யா­னது தற்­போ­தைய  சூழலில் நாட்­டுக்கு அவ­சி­ய­மான ஒன்­றா­கவும் உள்­ளது. 

இவ்­வு­டன்­ப­டிக்கை மூலம் அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்தை விற்­பனை செய்­யப்­போ­வ­தில்லை. அவ்­வா­றான பொய்ப்­பி­ர­சா­ரத்­தையே சில தரப்பு மேற்­கொண்டு வரு­கி­றது. அத்­துடன் குறித்த ஒப்­பந்­தத்தில் 80/ 20 சத­வீதப் பங்கு என ஏற்­க­னவே குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது. எனினும் தற்­போது அது 70/30 சத­வீதப் பங்­காக மாற்­றப்­பட்­டுள்­ளது.

மேலும் அம்­பாந்­தோட்டை துறை­முக உடன்­ப­டிக்­கையில் நூறு சத­வீத பாது­காப்பு வகி­பாகம் இலங்­கைக்கே பொறுப்­பாக்­கப்­பட்­டுள்­ளது. அவ்­வி­டயம் உடன்­ப­டிக்­கையில் தெளி­வாகக் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. சீனா உட்­பட வேறு நாடு­களின் படைப்­பி­ரி­வுகள் வருகை தரு­வா­தா­யினும் அதற்கு இலங்­கை­யி­டமே அனு­மதி பெற­வேண்டும்.  அத்­துடன் அங்­குள்ள நுளை­வாயில் காவ­லாளி முதல் சகல பாது­காப்பு நட­வ­டிக்­கை­க­ளையும் இலங்­கையே மேற்­கொள்­ள­வுள்­ளது.

மேலும் நல்­லாட்சி அர­சாங்கம் ஆட்­சியைப் பொறுப்­பேற்ற பின்னர் அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்தை எவ்­வாறு கொண்டு நடத்­து­வது தொடர்பில் யோசிக்க வேண்­டிய கட்­டா­யத்­திற்கு துறை­முக அதி­கார சபை வந்­தது.  ஏனெனில் குறித்த துறை­மு­கத்தை நிர்­மா­ணிப்­ப­தற்கு 1.5  பில்­லியன் அமெ­ரிக்க டொலர் நிதி செல­வி­டப்­பட்­டுள்­ளது.  அதற்­காக பெறப்­பட்ட கடனை செலுத்த வேண்­டிய பொறுப்பு துறை­முக அதி­கார சபைக்கு பொறுப்­பாக்­கப்­பட்­டது.துறை­முக அதி­கார சபைக்கு கிடைக்கும் இலா­ப­த்தின்  மூலம்தான் அக்­கடன் தொகை செலுத்­தப்­பட்டு வந்­தது.

எனவே 2011 ஆம் ஆண்­டி­லி­ருந்து  இது­வ­ரையில் துறை­முக அதி­கா­ர­சபை குறித்த கட­னுக்­காக  46 ஆயிரம் மில்­லியன் ரூபா நிதியை துறை­மு­கத்தை நடத்­து­வ­தற்கும் செல­வ­ழித்­துள்­ளது.   துறை­முக அதி­க­கார சபை தனக்கு கிடைக்கும் இலா­பத்தின் 9.1 பில்­லியன் ரூபா நிதி­யினை வரு­டாந்தம் அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்­திற்­காக செல­வ­ழிக்­கி­றது. ஆகவே அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்­தி­னு­டாக துறை­முக அதி­கார சபை எந்­த­ளவு சுமை­யினை பொறுப்­பேற்­றுள்­ளது­என்பதனை புரிந்­து­கொள்ள முடி­கி­றது. 

எனவே தொடர்ந்தும் குறித்த கடனை நிர்­வ­கிக்க  முடி­யாத நிலை துறை­முக அதி­கார சபைக்கு ஏற்­பட்­டுள்­ளது. ஆக­வேதான் அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்தை அபி­வி­ருத்தி செய்­வ­தற்கு இவ்­வா­றான உடன்­ப­டிக்கை கைச்சாத்திடப்படவுள்ளது. ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட பின்னர் துறைமுக அதிகார சபை நிதி செலவழிக்க வேண்டிய தேவை இல்லை. 

மேலும் குறித்த உடன்படிக்கை மூலம் துறைமுக அதிகாரசபைக்கு 1.12 பில்லியன் டொலர் நிதி கிடைக்கவுள்ளது. அந்நிதி திறைசேரிக்குச் செல்லவுள்ளது. எனவே செலுத்த வேண்டிய கடனை திறைசேரி பொறுப்பேற்கவுள்ளது. ஆகவே துறைமுக அதிகார சபை செலுத்த வேண்டிய 9.1 பில்லியன் ரூபா  நிதியை சேமிக்க முடியும். அந்நிதியைக் கொண்டு துறைமுகங்களை அபிவிருத்தி செய்ய முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08