தூக்குமேடைக்கு அனுப்ப முயற்சி

Published By: Raam

21 Jan, 2016 | 07:51 AM
image

நாட்டைப் பாது­காத்த எமது படை­யி­னரை ஜெனிவா பிரே­ர­ணைக்கு அமைய “தூக்கு மேடைக்கு” அனுப்­பு­வ­தற்கு இந்த அரசு முயற்­சிக்­கின்­றது. எனவே மக்கள் விழிப்­பாக இருக்க வேண்டும் என எச்­ச­ரிக்கை விடுத்­துள்ள முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ, நாட்டில் தற்­போது நல்­லாட்சி அல்ல “பாதாள உலக” ஆட்சி தலை­தூக்­கி­யுள்­ள­தா­கவும் குற்றம் சாட்­டி­யுள்ளார்.

எஹெ­லி­ய­கொடை புளு­க­ஹ­பிட்­டிய ஸ்ரீ சுமண பிரிவென் விஹா­ரையில் இடம்­பெற்ற நிகழ்­வொன்றில் உரை­யாற்றும் போதே முன்னாள் ஜனா­தி­ப­தியும் குரு­நாகல் மாவட்ட ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் எம்.பி.யுமான மஹிந்த ராஜபக் ஷ இவ்­வாறு தெரி­வித்­துள்ளார்.

இங்கு அவர் மேலும் உரை­யாற்­று­கையில் தெரி­வித்­தி­ருப்­ப­தா­வது,

நாட்டைப் பயங்­க­ர­வா­தி­க­ளி­ட­மி­ருந்து உயிர் அர்ப்­ப­ணிப்புச் செய்து எமது படை­யினர் பாது­காத்­தனர். ஆனால் இன்று இந்த அரசு அவர்­களை நடத்தும் முறை கவ­லைக்­கு­ரி­ய­தா­க­வுள்­ளது.

ஜெனீவா பிரே­ர­ணைக்கு அமைய எமது படை­யி­னரை “தூக்கு மேடைக்கு” அனுப்பி வைக்க அரசு தயா­ரா­கின்­றது. எனவே மக்கள் இவ்­வி­ட­யத்தில் விழிப்­பாக இருக்க வேண்டும். முப்­பது வருட யுத்­தத்­தி­லி­ருந்து மீட்­டெ­டுத்த நாட்டை மீண்டும் பின்­னோக்கிக் கொண்டு செல்ல இட­ம­ளிக்க முடி­யாது.

எமது ஆட்சி மீது விருப்­ப­மில்­லாத மக்கள் புதிய ஆட்­சியை ஏற்­ப­டுத்திக் கொண்­டனர். ஆனால் புதிய ஆட்­சியை ஏற்­ப­டுத்திக் கொண்ட மக்கள் இன்று விழி­பி­துங்கிப் போயுள்­ளனர். நாட்டில் ஸ்திர­மில்லா நிலை தலை­தூக்­கி­யுள்­ளது.

நல்­லாட்சி என்ற பெயர் மட்டும் தான் உள்­ளது. ஆனால் நாட்டின் பல பிர­தே­சங்­களில் பாதாள உலக கோஷ்­டி­களின் ஆட்சி நடக்­கின்­றது. நாட்டு மக்கள் மத்­தியில் மாயை­யான நல்­லாட்­சியை காட்டி ஏமாற்­றிய அர­சாங்கம் தற்­போது எவ்­வாறு நடந்து கொள்­கின்­றது. என்­பதை மக்கள் தமது கண்ணால் பார்க்க ஆரம்­பித்­துள்­ளனர்.

அப்பா, அக்கா, தங்கை என்ற பேதம் தெரி­யாத காட்டு மிராண்டி யுகம் தலை­தூக்­கி­யுள்­ளது. கொள்­ளைகள் கொலைகள், குற்றச் செயல்கள் அதி­க­ரித்­துள்­ளன. எமது பௌத்த குரு­மாரை கட்­டுப்­ப­டுத்த சட்டம் கொண்டு வரப்­பட்­டுள்­ளது.

இன்று நாட்டில் இடம்­பெறும் “பாதாள உலக” நிர்­வா­கத்­திற்கு எதி­ராக பெளத்த குருமார் போராட ஆயத்தமாகின்றனர்.

இதனைத் தடுத்து நிறுத்தவே பௌத்த குருமாரை கட்டுப்படுத்தும் சட்டங்கள் கொண்டு வரப்படவுள்ளது என்றும் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41