மின் பிறப்­பாக்கத் திட்­டத்­திற்கு அனு­மதி

Published By: Robert

25 Jul, 2017 | 10:31 AM
image

 இலங்­கையின் மின்­சா­ரத்­துறை ஒழுங்­கு­றுத்­து­ந­ரான இலங்கை பொதுப் பயன்­பா­டுகள் ஆணைக்­கு­ழுவின் அனு­ம­தி­யினைக் கோரி இலங்கை மின்­சார சபை­யா­னது குறை செலவு நீண்ட கால மின் பிறப்­பாக்க விரி­வாக்­கத்­திட்டத்தினை சமர்ப்­பித்து இருந்­தது. இலங்­கைக்­கான தொடர்ச்­சி­யான மின் வழங்கல் மற்றும் சக்திப் பாது­காப்பு ஆகிய நோக்­கு­க­ளுடன், இத்­திட்­டத்தின் வழி­யாக காண்­பிக்­கப்­பட்ட பல்­வேறு தெரி­வு­களில் சிறந்­த­தொரு தெரிவுத் திட்­டத்­திற்கு பொதுப் பயன்­பா­டுகள் ஆணைக்­கு­ழு­வா­னது அனு­மதி அளித்­துள்­ளது.

இலங்கை மின்­சார சபை­யினால் நடத்­தப்பட்­டதும் மின்­சார விரி­வாக்கத் திட்­ட­மிடற் கற்­கைகள் பற்­றி­ய­து­மான அண்­மைய ஆய்வு முடி­வு­களின் அடிப்­ப­டை­யி­லேயே இத்­திட்டம் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது. பல்­வேறு மின் பிறப்­பாக்கத் தெரிவு திட்­டங்­களை உள்­ள­டக்கி அளிக்­கப்­பட்ட, இத்­திட்டம் 2018–-2037 காலப்பகு­திக்­கா­னது.இலங்கை மின்­சார சபை­யா­னது, குறை செலவு கொள்­கை­க­ளுக்கு அமைய, அடுத்த 20 ஆண்­டு­கா­லத்­திற்கு நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்­கான திட்­ட­மாக “பேஸ் கேஸ் திட்டம்” இனைப் பரிந்­து­ரைத்­தது.இலங்கை பொதுப் பயன்­பா­டுகள் ஆணைக்­கு­ழு­வா­னது LCLTGEP 2018–-37 தொடர்பில் ஒரு பொது­மக்கள் ஆலோ­ச­னை­ய­ளிப்­பினை நடத்தி பங்­கா­ளர்­களின் கருத்­து­களைப் பெற்றுக் கொண்­டது. அத்­துடன் மின்­சார சபையால் சமர்ப்­பிக்­கப்­பட்ட தெரி­வுத்­திட்­டங்கள் மற்றும் பரிந்­து­ரைக்­கப்­பட்ட திட்­டங்கள் தொடர்பில் ஆழ­மான கற்­கையும் ஆணைக்­கு­ழுவால் நடத்­தப்­பட்­டது.

இந்தக் கற்­கை­களின் ஊடாக, தர­வேற்­றப்­பட்ட எரி­பொருள் விலை­களின் திருத்­தங்கள், வெளிக்­கா­ர­ணி­களின் (சமூக மற்றும் சுற்­றுச்­சூழல் செல­வுகள்) செல­வுகள் ஆகி­ய­வற்­றையும் ஆணைக்­குழு ஏற்றுக் கொண்­டமை குறிப்­பி­டத்­தக்­கது. நாட்டில் மின்­சாரத் தடங்­கல்கள் ஏற்­ப­டாமல் மிகப் பொருத்­த­மா­னதும் நிலை­பே­றா­ன­து­மான தொழி­ல்நுட்­பத்தை அடிப்­ப­டை­யாகக் கொண்ட குறை செலவு மின்­னி­லையச் சேர்க்­கை­யினை அடை­யாளம் காண்­பதே இதன் நோக்கம் ஆகும்.

அடுத்த 20 ஆண்டு காலப்­ப­கு­தியில், 242MW பிர­தான நீர்ச்­சக்தி, 215MW குறும் நீர்ச்­சக்தி, 1389MW சூரிய சக்தி, 1205MW காற்­றுச்­சக்தி, 85MW உயிர்த்­தி­டப்­பொருள் சக்தி, 4800MW இயற்கை வாயு, 330 MW எண்ணெய் அடிப்­ப­டை­யி­லான சக்தி, 105MW காஸ் டேர்பைன் சக்தி ஆகி­யன அடுத்த 20 ஆண்­டு­கா­லத்­திற்­கான மின் பிறப்­பாக்க முறை­மையில் சேர்க்­கப்­ப­டு­வ­தற்கு, இலங்கை பொதுப் பயன்­பா­டுகள் ஆணைக்­குழு அனு­மதி அளித்­துள்­ளது.

இதே திட்­டமே இலங்கை மின்­சார சபை­யினால் ஒரு தெரி­வுத்­திட்­ட­மாக LCLTGEP 2018-–37 இல் முன்­மொ­ழி­யப்­பட்­டுள்­ளது. எவ்­வா­றா­யினும், 15,607.70 மில்­லியன் அமெ­ரிக்க டொலர்­களை முத­லீட்டுச் செல­வாகக் கொள்­வதால், இது அடிப்­ப­டைத்­திட்­ட­மாக மின்­சார சபையால் முன்­மொ­ழி­யப்­ப­ட­வில்லை.ஆனாலும், தர­வேற்­றப்­பட்ட எரி­பொருள் விலைகள் மற்றும் வெளிக்­கா­ரணிச் செல­வுகள் ஆகி­ய­வற்றை திருத்­திய பின்னர்,  குறை செலவு கொள்­கை­களின் அடிப்­ப­டையில் 13,336 மில்­லியன் அமெ­ரிக்க டொலர்கள் முத­லீட்டுச் செல­வு­டை­ய­தா­கிய இத்­திட்­டத் ­தெ­ரிவு ஆணைக்­கு­ழுவால் ஏற்­கப்­பட்­டது.

2018–2037 காலப் பகு­தியில் இலங்­கை­யா­னது 5.0% சக்தி தேவைப்­பாட்டு வளர்ச்சி வீத­த்தையும் 4.5% உச்சத் தேவைப்­பாட்டு வளர்ச்சி வீதத்தையும் எதிர்பார்க்கின்றது.

அனுமதிக்கப்பட்ட திட்டத்தினை விரைந்து நடைமுறைப்படுத்துமாறு இலங்கை மின்சார சபையை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு கோரியுள்ளது. இதன் மூலமாகவே எதிர்காலத்தில் மின்சாரத் தடைகள் மற்றும் வெளியாரி டமிருந்தான அவசர மின் கொள்வனவு ஆகியவற்றை தவிர்க்க முடியும் எனவும் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04