இந்­திய – தென்­னா­பி­ரிக்க அணி­க­ளுக்­கி­டையே பெங்­க­ளூரில் நடை­பெற்­று­வரும் இரண்­டா­வது டெஸ்ட் போட்­டியின் இரண்­டாவது நாள் ஆட்டம் மழை யால் கைவி­டப்­பட்டது.

இந்­தி­யாவில் சுற்றுப் பயணம் மேற்­கொண்­டுள்ள தென்­னா­பி­ரிக்க அணி 4 டெஸ்ட் போட்­டிகள் கொண்ட தொடரில் விளை­யாடி வரு­கி­றது.


மொஹா­லியில் நடை­பெற்ற முதல் போட்­டியில் இந்­திய அணி வெற்றி பெற்ற நிலையில், பெங்­க­ளூரில் இரண்­டா­வது போட்டி தொடங்­கி­யது. இதில் நாணய சுழற்­சியில் வென்ற இந்­திய அணி பந்­து­வீச்சை தெரி­வு­செய்­தது.


இந்­திய பந்­து­வீச்­சா­ளர்­களை சமா­ளிக்க முடி­யாமல் தென்­னா­பி­ரிக்க அணி 214 ஓட்­டங்­க­ளுக்குள் சுருண்­டது. தொடர்ந்து விளை­யா­டிய இந்­திய அணி முதல் நாள் ஆட்ட முடிவில் விக்கெட் இழப்­பின்றி 80 ஓட்­டங்­களை எடுத்­தி­ருந்­தது.


இதை­ய­டுத்து நேற்று இரண்­டா­வது நாள் ஆட்டம் தொடங்­க­வி­ருந்த நிலையில் பெங்­க­ளூரில் பெய்து வரும் கன மழையால், ஆடு­களம் முழு­வதும் மூடப்­பட்­டது.


மழை தொடர்ந்து பெய்­ததால் மைதா­னத்தை, சூப்­பர்­சானிக் மூலம் காய­வைக்க முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட்­டன. எனினும் பிற்­ப­க­லிலும் மழை தொடர்ந்­ததால், ஆட்­டத்தை கைவி­டு­வது என நடு­வர்கள் முடிவு செய்­தனர்.


இதை­ய­டுத்து ஒரு பந்­து­கூட வீசப்­ப­டாத நிலையில் இரண்டாம் நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது.