Image result for டெங்கு virakesari

நீர்­கொ­ழும்பு வைத்­தி­ய­சா­லையில் குழந்தை பிர­ச­வித்து இரண்டு தினங்­களின் பின்னர் டெங்கு காய்ச்சலின் கார­ண­மாக  இளம் தாயொ­ருவர்  நேற்று  காலை 7.30 மணி­ய­ளவில் மர­ண­மா­கி­யுள்ளார். நீர்­கொ­ழும்பு பிட்­டி­பனை பிர­தே­சத்தைச் சேர்ந்த 29 வய­து­டைய ஜோசப் சுரந்­திகா சமோ­தனி குமாரி  என்­ப­வரே  டெங்கு காய்ச்­ச­லினால் பலி­யா­ன­வ­ராவார். வைத்­தி­ய­சா­லையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்­தி­யர்கள் கடும் பிர­யத்­தனம் மேற்­கொண்ட போதும்  சிகிச்சை பல­னின்றி அவர் மர­ண­மா­கி­யுள்ளார்.  

இதே­வேளை, வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்ட பின்­னரே அவர் டெங்கு காய்ச்­ச­லினால் பாதிக்­கப்­பட்­ட­தாக இறந்த பெண்ணின் உற­வி­னர்கள் குற்­றச்­சாட்டு தெரி­விக்­கின்­றனர். அவர்கள் மேலும் தெரி­விக்­கையில், கடந்த 14 ஆம் திகதி நீர்­கொ­ழும்பு வைத்­தி­ய­சா­லையில் அவரை அனு­ம­தித்தோம். 

நான்கு நாட்­களின் 

பின்னர்  டெங்கு வார்ட்டில் அனு­ம­தித்­தார்கள். அங்கு நான்கு நாட்கள் தங்­கி­யி­ருந்த நிலையில் குழந்­தையை 22 ஆம் திகதி பிர­ச­வித்தார். பின்னர் கடும் சுக­யீ­ன­முற்­றதன் கார­ண­மாக தீவிர சிகிச்­சைப் பிரிவில் அனு­ம­தித்­தார்கள், அங்கு வைத்து சிகிச்சை பல­னின்றி அவர் இறந்தார் என்று தெரி­வித்­தனர்.