(லியோ நிரோஷ தர்ஷன்)

யாழ். மாவட்ட நீதிபதி இளஞ்செழியன் மீதான துப்பாக்கிப் பிரயோக முயற்சியை அரசாங்கம் சிறிய விடயமாக கருதக் கூடாது. நாட்டின் சட்ட ஒழுங்குகளை உறுதிப்படுத்தி பரந்தளவில் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு உண்மைகள் கண்டறியப்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். 

கொழும்பில் இவ்வாறான துப்பாக்கிப் பிரயோகங்கள் இடம்பெற்றால் அதனை பாதாள உலகக் குழுக்களை காரணம் காட்ட முடியும். ஆனால் வடக்கின் நிலைமை அவ்வாறானது அல்ல. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஆரம்பகாலம் இவ்வாறான சம்பவங்களையே வெளிப்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார். 

வீரக்கெட்டிய - கொந்தகல விகாரையில் இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.