(க.கிஷாந்தன்)

மஸ்கெலியா - ஸ்டஸ்பி தேவகந்த என்னும் பிரதேச பாடசாலை ஒன்றில் தரம் 11 இல் கல்வி கற்கும்  மாணவி ஒருவரை துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் 5000 ரூபா பிணையிலும், ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணைகளிலும் விடுவிக்கப்பட்டுள்ளார்.

குறித்த ஆசிரியர் இன்று மஸ்கெலியா பொலிஸாரினால் ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தின் ; ஆஜர் படுத்திய போதே நீதவான் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளார்.

கடந்த வருடம் டிசம்பர் மாதம் 14 ஆம் திகதி குறித்த ஆசிரியரின் வீட்டில் மாணவியை துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்ததாக குறித்த மாணவி பொலிஸாரிடம் முறைப்பாடு செய்ததையடுத்து ஆசிரியர் நேற்று மஸ்கெலியா பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.

சம்பவத்தில் திருமணமான இரண்டு பிள்ளைகளின் தந்தையான ஆசிரியர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார்.