சான்றளிக்கப்பட்ட பட்டயக் கணக்காளர்கள் சங்கமான ACCA’ இன் (the Association of Chartered Certified Accountants) நிபுணத்துவ கணக்கியல் முதுமாணிக் கற்கைநெறியானது (MSc in Professional Accountancy) இலண்டன் பல்கலைக்கழகத்துடன் (University of London) இணைந்து உலகில் முதன்மை ஒருங்கிணைக்கப்பட்ட முதுமாணிக் கற்கைநெறியாக விளங்குகின்றது.

ACCA’ இன் உலகளாவிய விஸ்தரிப்பு நடவடிக்கையின் ஒரு அங்கமான இதன் அங்குரார்ப்பண நிகழ்வு கொழும்பில் இடம்பெற்ற வேளையில் ACCA-X என்ற அதன் ஒன்லைன் பரீட்சை தளத்தினையும், எனப்படும் சர்வதேச வர்த்தக சேவைகள் (Global Business Service) தகைமைகளையும் ஆரம்பித்து வைத்தது.

இந்த தகைமைகள் அதிதுரிதமாக அதிகரித்து வரும் மேம்படுத்தப்பட்ட சந்தைகளில் வளர்ந்து வரும் அயலாக்க தொழிற்துறை பிரிவினை நோக்காக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

ACCA’ இன் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான தேச தலைமை அதிகாரி நிலூஷா ரணசிங்க இது குறித்து தெரிவிக்கையில்,

“ஒரு ஸ்தாபனம் என்ற ரீதியில் திறந்த அணுகுமுறை தொடர்பில் நாங்கள் உயர் பெறுமதியை கொண்டுள்ளோம். இலண்டன் பல்கலைக்கழகத்துடன் நாம் கொண்டுள்ள இந்த பங்குடமையானது இன்னும் பலரை நாங்கள் அடைவதற்கு எமக்கு உமவியளிக்கும் என்பதுடன், அவர்கள் கற்றல் நடவடிக்கைகளை மேற்கொண்டு முதுமாணிப் பட்டம் ஒன்றினை பெற்றுக்கொள்வதற்கும் உதவும்” என்றார்

ACCA’ இன் விஸ்தரிக்கப்பட்ட தகைமைகள் அங்கு கற ;றுக்கொள்பவர்களின் வேலைத்தளங்களில் சிறப்பான முறையில் பணியாற்றுவதற்கு உதவுகின்றது என்று மேலும் தெரிவித்த அவர் “புத்தாக்க நடவடிக்கைகளை நாம் தொடர்ந்தும் முன்னெடுக்கின்றோம். அது எங்கள் இதயத்தில் உள்ளது.

இந்த நிபுணத்துவ கணக்கியல் முதுமாணிக் கற்கைநெறியானது இலண்டன் பல்கலைக்கழகத்தின, சர்வதேச நிகழ்ச்சித்திட்டங்கள் ஊடாக வழங்கப்படுகின்றது. இந்த கற்கைநெறியானது லண்டன் பல்கலைக்கழகத்தின் உலகத்தரமிக்க முகாமைத்துவ விஞ்ஞானம் மற்றும் புத்தாக்க பீடத்தின் வழிகாட்டுதலுக்கு அமைவாக முன்னெடுக்கப்படுகின்றது. 

மேர்க்கியூரி முகாமைத்துவ கல்வி நிறுவனம்(Mercury Institute of Management) மற்றும் கொழும்பு ரோயல் கல்வி நிலையம் (Royal Institute of Colombo) ஆகியன லண்டன் பல்கலைக்கழகத்தின் நிபுணத்துவ கணக்கியல் முதுமாணிக் கற்கைநெறியினை இலங்கையில் கற்றுக்கொள்வதற்கு உத்தியோகபூர்வமாக நியமிக்கப்பட்ட கற்கை நிலையங்களாக விளங்குகின்றன.

உலகளாவிய ரீதியில் ஏறத்தாள 50ற்கு மேற்பட்ட மாபெரும் தொழில்தருநர்களின் ஆலோசனை பெறப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த GBS தகைமையானது தொழினுட்ப திறன்கள், துறைசார் அறிவு, வர்த்தக உட்பார்வை, பகுப்பாய்வு திறமைகள் போன்ற வர்த்தக முன்னெடுப்பினை நடத்துவதற்கு வேண்டிய மேலதிக தகைமைகளை அளிக்கும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது.

GBS ஆனது துரித கதியில் வளர்ந்து வரும் தொழிற்துறையாக விளங்குவதுடன் பல்வகை நிதி மாற்ற நிகழ்ச்சித்திட்டங்களின் கூட்டிணையாகவும் திகழ்கின்றது. ACCA தமது ஒருங்கிணைக்கப்பட்ட அறிவாற்றலின் உதவியுடன் விசேடமாக இந்த துறையினருக்கென வடிவமைக்கப்பட்ட இந்த புதிய தகைமைகளை அளிக்கின்றது. 

“ACCA ஆனது GBS இனை நிதி, மனித வளம், தகவல் தொழினுட்பம், சொத்துகள் மற்றும் வசதிகள் துறைக்கான செயற்பாடுகளை ஒருங்கிணைக்கும் இத்தொழிற்துறைக்கான மாற்றாக நோக்குகின்றது” என்று தெரிவித்த நிலூஷா “GBS ஆனது நிதித்துறையின் தாக்கத்தினை மேலும் அதிகரிக்கும் என நம்புகின்றோம். துல்லியமான வர்த்தக உட்பார்வைகள் ஆகியவற்றை அளித்து நிதித்துறை தலைமையியலாளர்கள் தமது ஏனைய பொறுப்புகளை இலகுவாக நோக்குவதற்கு வழியமைத்துக்கொடுக்கின்றது.

அலுவலக பின்னணி பணிகளை நிதித்துறையினையும் ஒருங்கிணைத்து எவ்வாறு பெறுமதிமிக்க வகையில் நிர்வகிக்கலாம் என்பதை GBS பிரதிநிதித்துவப்படுத்துகின்றது” என அவர் மேலும் குறிப்பிட்டார்

இந்த சர்வதேச வர்த்தக சேவைகள் தகைமைகள் மூன்றாக வகுக்கப்பட்டுள்ளன சர்வதேச வர்த ;தக சேவைகள் சான்றிதழ் கற்கைநெறியானது தனித்துவமிக்க ஒன்லைன் பாடநெறி மதிப்பாய்வை கொண்டிருப்பதுடன் நிறுவனம் ஒன்றில் வெற்றிகரமாக பணியாற்றுவதற்கு வேண்டிய அடிப்படை அறிவு மற்றும் திறன்களை அளிக்கும்.

GBS சர்வதேச வர்த்தக சேவைகள் டிப்ளோமா கற்கைநெறியானது தொழினுட்ப திறன்களை கற்பித்து, மேலும் சிக்கலான முகாமைத்துவ செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான மேம்பாட்டு திறமைகளை அளிக்கும். சர்வதேச வர்த்தக சேவைகள் மேம்பட்ட டிப்ளோமா (Advanced Diploma) ஆனது மேலும் மேம்படுத்தப்பட்ட நிதி மற்றும் முகாமைத்துவ கணக்கியல் உள்ளடக்கங்களை கொண்டிருப்பதுடன், பணியாளர்களின் தொழினுட்ப திறன்கைள மேம்படுத்தும் செயற்திறன் முகாமைத்துவத்தினையும் கொண்டுள்ளது. 

டிஜிடல் தேசாந்தரிகள் என அழைக்கப்படும் Gen-Z இன் அதி துரிதமாக அதிகரித்துவலும் இணைய பாவனையை கருத்திற்கொண்டும் மேம்பட்ட சர்வதேச போக்குகளுக்கு அமைவாக ACCA போன்ற நிபுணத்துவ நிறுவனங்கள் இணங்கி நடக்க வேண்டும் என்பதற்கு அமைவாகவும் நடக்க வேண்டும் என ACCA இன் MENASA (Middle East, North America, South Asia) இன் கல்விக்கான தலைமை அதிகாரி ரெஹான் உடின் அவர்கள் தெரிவித்தார்

“கணக்கியல் தகைமைகளுக்கான கேள்வி உலகளாவிய ரீதியில் அதிகரித்துள்ளது. இதனைக் கருத்திற்கொண்டே ACCA திறந்த அணுக்கம், இலகுவான பாவனை, மேம்பட்ட தளம் ஆகியவற்றுடன் சுடிய ACCA-X. ACCA-X ஆகியவற்றை ஒன்லைனில் அளிக்கின்றது. இது ACCA தகைமையை பெற்றுக்கொள்வதற்கான மாற்று வழியாகவும் திகழ்கின்றது” என்றார்.