பொகவந்தலாவ கெக்கர்சோல்ட் தோட்டத்தில் குளவி கொட்டுக்கு இலக்காகிய எட்டு பெண் தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தேயிலை தோட்டத்தில் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த போது தொழிலாளர்கள் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

இந்த சம்பவத்தில் பாதிப்படைந்த 8 பேரும் பொகவந்தலா வைத்தியசாலையில் சிக்கிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.