திருகோணமலை ரவுண்டி தீவு கெவுலியாதுடுவ பகுதியில் கடல் அலையினால் அடித்து செல்லப்பட்ட இரு யானைகளை கிழக்கு கடற்படை பிரிவுக்குட்பட்ட கடற்படையினர் நேற்று அதிகாலை மீட்டுள்ளனர். 

ரோந்து பணிகளில் ஈடுபட்டிருந்த கடலோர ஐ.பி.சி படகு மூலம் கடலில் மூழ்கி உயிருக்காக போராடிக்கொண்டிருந்த இரு யானைகளையும் கடற்படை வீரர்கள் வனத்துறை அதிகாரிகளின் உதவிகளோடு மீட்பு பணியை வெற்றிகரமாக முடித்துள்ளனர்.

கடற்படையினரது தீவிர முயற்சியின் பின்னர் கடற்கரைக்கு திசை திருப்பப்பட்ட இரு யானைகளும் பாதுகாப்பாக கெவுலியாதுடுவ பிரதேசத்தில் விடுவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்றே கடந்த 11 ஆம் திகதி கோக்குத்துடுவாய் பகுதியில் கடலில் மூழ்கி தத்தளித்த யானையை இக் கடற்படை வீரர்கள் காப்பாற்றியமை குறிப்பிடத்தக்கது.