இந்­திய அணிக்­கெ­தி­ரான முத­லா­வது டெஸ்ட் போட்­டியில் விளை­யா­ட­வுள்ள இலங்கை அணி நேற்று அறி­விக்­கப்­பட்­டது. அதன்படி நீண்ட நாட்­க­ளுக்குப் பிறகு தனஞ்­சய டி சில்வா அணியில் இணைக்­கப்­பட்­டுள்ளார். 

அதே­வேளை சந்­தி­மா­லுக்கு பதி­லாக அவரின் தலைமைப் பதவி ரங்­கன ஹேரத்­துக்கு வழங்­கப்­பட்­டுள்­ளது.

காலியில் நாளை மறு­தினம் ஆரம்­ப­மா­க­வுள்ள இலங்கை மற்றும் இந்­திய அணி­க­ளுக்­கி­டையில் மூன்று போட்­டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளை­யா­ட­வுள்ள இலங்கை அணியை இலங்கைக் கிரிக்கெட் நிறு­வனம் நேற்று மாலை 6 மணி­ய­ளவில் அறி­வித்­தது. 

அறி­விக்­கப்­பட்­டி­ருக்கும் இந்த அணியின் மூலம் மீண்டும் இலங்கை அணிக்­காக டெஸ்ட் போட்­டி­களில் ஆடு­வ­தற்­காக மத்­திய வரிசை துடுப்­பாட்ட வீரர் தனஞ்­சய டி சில்வா மற்றும் இடது கை சுழற்­பந்து வீச்­சாளர் மலிந்த புஷ்­ப­கு­மார ஆகியோர் அழைக்­கப்­பட்­டுள்­ளனர்.

இலங்கை டெஸ்ட் அணிக்கு புதிய தலை­வ­ராக நிய­மிக்­கப்­பட்­டி­ருந்த தினேஷ் சந்­திமால், நிமோ­னியா காய்ச்­சலால் பாதிக்­கப்­பட்­டி­ருப்­பதால் இந்­திய அணிக்கு எதி­ரான டெஸ்ட் தொடரில் இலங்கை அணியை அனு­ப­வ­மிக்க சுழல் பந்­து­வீச்­சா­ள­ரான ரங்­கன ஹேரத் வழி­ந­டத்­த­வுள்ளார். 

தற்­போது வெளி­யி­டப்­பட்­டி­ருக்கும் இலங்கை அணியானது 8 துடுப்­பாட்ட வீரர்கள், 3 சுழல்­பந்து வீச்­சா­ளர்கள் மற்றும் 4 வேகப்­பந்து வீச்­சா­ளர்கள் ஆகி­யோரை உள்­ள­டக்­கி­யுள்­ளது.

இலங்கை டெஸ்ட் அணி

ரங்­கன ஹேரத் (அணித்­த­லைவர்), உபுல் தரங்க, திமுத் கரு­ணா­ரத்ன, தனுஷ்க குண­தி­லக்க, குசல் மெண்டிஸ், தனஞ்­சய டி சில்வா, அஞ்­சலோ மெத்­தியூஸ், அசேல குணரத்ன, நிரோஷன் திக்வெல்ல, தில்ருவான் பெரேரா, மலிந்த புஷ்பகுமார, சுரங்க லக்மால், நுவன் பிரதீப், லஹிரு குமார, விஷ்வ பெர்னாண்டோ.

கடந்த வரு­டத்தில், ஆஸி.யுடனான டெஸ்ட் தொடரில் இலங்கை சார்­பாக அதிக ஓட்­டங்கள் குவித்­தி­ருந்த தனஞ்­சய டி சில்வா தொடர்ந்து மோச­மான ஆட்­டத்தை வெளிப்­ப­டுத்­திய கார­ணத்­தினால் இலங்கை அணி­யி­லி­ருந்து நீக்­கப்­பட்­டி­ருந்தார். தற்­போது சந்­திமாலுக்கு பதிலாக தனஞ்­ச­ய­வுக்கு வாய்ப்பு வழங்­கப்­பட்­டுள்­ளது. இந்த வாய்ப்பை அவர் சரி­யாகப்பயன்­ப­டுத்தி அணியில் தொடருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.